சென்னை: தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா மற்றும் அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா இடையே, நெருக்கமான நட்பு இருக்கிறது என, சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக தகவல் வெளியானது. அதை உறுதி செய்வது போல, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், ‘வாட்ஸ் ஆப்’பில் வெளியாகின. பின், ‘அந்த படம் போலியானது; சசிகலா புஷ்பாவும், அவரது கணவர் லிங்கேஸ்வர திலகனும் இருக்கும் படத்தை, ‘மார்பிங்’ செய்து வெளியிட்டனர்’ என, தகவல்கள் பரவின. சசிகலா புஷ்பாவும், அவரது கணவரும் இருக்கும் படங்களும் வாட்ஸ் ஆப்பில் வெளியானது; இதைத் தொடர்ந்து, அப்போதைய பரபரப்பு அடங்கியது. இந்நிலையில் பெரும் தொகை ஒன்றை, சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவிடம் கொடுத்திருந்தார்; சமீபகாலமாக அந்த பணத்தை திரும்ப கேட்டு, அவர் போன் செய்துள்ளார். போனை எடுக்காமல், திருச்சி சிவா தவிர்த்ததை தொடர்ந்தே, டில்லி விமான நிலையத்தில் வைத்து சிவாவை, சசிகலா புஷ்பா தாக்கியுள்ளார் என் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து திருச்சி சிவா கூறும்போது, டில்லி விமான நிலையம் வரை வந்த பிறகுதான், என் மனைவியின் நினைவு தினம் நினைவுக்கு வந்தது. என் மனைவியின் நினைவு தினம் நினைவுக்கு வந்தபோது சசிகலா புஷ்பாவும் அங்கு வந்தார். என்னை சரமாரியாக அறைந்தார். சசிகலா புஷ்பா என்னை 4 முறை அறைந்ததாக கூறியுள்ளார். அது தவறானது. அவர் என்னை 4 முறை அறையவில்லை என்றும், ஒரு முறை அறைந்தார், என்றார்.Trichysiva-sasikalapush

இந்த தகவல் தெரிந்ததும் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி இன்று வெளியிடாத கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐயோ… அடிக்கிறாங்களே! கொல்றாங்களே! என்று தம்பி சிவா என்னைப்போல் கூப்பாடு போட்டிருந்தால் கட்டாயம் டெல்லி போலீஸ் சிவாவை காப்பாற்றி இருக்கும். இந்தியில் குரல் கொடுக்க மாறன் சகோதரர்கள் அந்த இடத்தில் இல்லாதது நமது துரதிஷ்டம். ராஜா, கனிமொழி 2 G திருட்டு கேஸ் விஷயமாக பல கழக வக்கீல்கள் வழக்கு சம்பந்தமாக டெல்லியை சுற்றி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களை வைத்து டெல்லியிலே இந்த கேஸை நடத்துவோம். மேலும் அந்த அம்மணி ஒரு அறை கொடுத்து விட்டு, நன்கு அறை கொடுத்தேன் என் புருடா விடுகிறார். எனவே எத்தனை அறை விழுந்தது என சிபிஐ விசாரணை கோரி நானும், தம்பி சிவாவும் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க கடற்கரை விரைகிறோம் என்று கூறியுள்ளார்.

மு.க. ஸ்டாலினும் இந்த விவகாரத்தை சட்டசபையில் எழுப்பி வெளிநடப்பு செய்ய இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

There are no comments yet