ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டு ராஜ்யசபா எம்.பி. போன்ற உயர் பதவியை பெற்ற சசிகலா புஷ்பா அதிரடியாக ராஜ்யசபாவில் அவர் மீதே பரபரப்பு புகார் கூறியது கண்டு அதிமுக வினர் அதிர்ந்து போயுள்ளனர். தூத்துக்குடி அதிமுகவில் பத்தோடு பதினொன்றாக இருந்தவர் சசிகலா புஷ்பா. தென் தமிழகத்து சர்ச்சைக்குரிய தொழிலதிபர் உதவியால் அதிமுகவில் திடீரென ஏறுமுகம் கண்டார். தூத்துக்குடி மேயராக, அதிமுக மகளிரணிச் செயலராக, ராஜ்யசபா எம்.பி.யாக அடுத்தடுத்து விஸ்வரூபமெடுத்தார் சசிகலா புஷ்பா.பின்னர் திமுக எம்பி திருச்சி சிவாவுடன் நெருக்கமாக சசிகலா புஷ்பா இருக்கும் சில படங்கள் வெளியாகி சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை கன்னத்தில் ஒத்தடம் கொடுத்து (செல்லமாக அறைந்து) திமுக மீதான அன்பை சூசகமாக வெளிப்படுத்தினார். இன்று காலை ராஜ்யசபா கூடியபோது, சசிகலா புஷ்பா கண்ணீர் மல்க பேசத் தொடங்கியதுமே அடுத்தடுத்து அதிமுக வினருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.என்னை ஜெயலலிதா அறைந்தார்; ராஜினாமா செய்யுமாறு மிரட்டுகிறார்’ என கிளிசரீன் இல்லாமலே கண்ணீர் வடித்து கதறல் டிராமா போட்டு தேசத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். இந்த நிகழ்வை கலைஞர் செய்திகள் தொல்லைக்காட்சியில் பார்த்த கருணாநிதி கோபாவேச கண்ணீர் நடிப்பை கண்டு வியந்து, கலைஞர் தொல்லைக்காட்சியில் ‘நவீன சொர்ணாக்கா’ என்ற புதிய மெகா சீரியலில் நடிக்க அழைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிடாத அறிக்கையில் சசிகலா புஷ்பாவின் கண்ணீரில் நான் மனோகரா கண்ணாம்பாவை பார்த்தேன். ஆவேசத்தில் அஞ்சலி தேவியைப் பார்த்தேன், என் பேனா மை கொதிக்கிறது, கைவிரல் கதை எழுத துடிக்கிறது, என்றார். மேலும் அவர் ‘கணவனுக்கு துரோகம், கள்ளத்தொடர்பு, ஆள் கடத்தல், மாமியார் மருமகளைத் துன்புறுத்துதல், மருமகள் மாமியாரை கொல்ல சதி செய்தல், கணவனிடம் இருந்து குழந்தையை பிரித்தல், அடுத்தவர் சொத்தை அபகரித்தல் போன்ற புரட்சிகர கருத்துக்களை கொண்ட சீரியல்களை திரையிடும் கலைஞர் தொல்லைக்காட்சியின் அனைத்து கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நடிகை கிடைத்துவிட்டார். விரைவில் “சொர்ணாக்கா ரிடர்ன்ஸ்” நெடுந்தொடர் அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஒளிபரப்பாகும், எனது கண்மணி கனிமொழியும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்று அறிவுத்துள்ளார். இதை தொடர்ந்து அறிவாலயத்தில் நடந்த போட்டோ ஷூட்டில் சசிகலா புஷ்பா கலந்து கொண்டதை அறிந்து கொண்ட திமுக தொண்டர்கள் கூட்டமாக கூடியதால் சிறிது நேரம் போக்கு வரத்து தடை பட்டதாக நம்ப தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks