புது டெல்லி : உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடக்கவுள்ளதை தொடர்ந்து முதல்வர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள ஷீலா தீட்சித்தை ஆதரித்து பிரதமர் பிரதமர் மோடியின் லோக்சபா தொகுதியான வாரணாசியில் காங்கிரஸ் கட்சியின் மெகா பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சோனியா பங்கேற்று பிரசாரம் செய்யவும் கட்சியினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக சோனியா நேற்று வராணாசி வந்தார். இதையடுத்து இன்று காலை வாரணாசியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் சோனியா. பாபட்பூரில் இருந்து கார் மூலம் நகரின் பல பகுதிகளில் மக்களை சந்தித்தார். சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர் ஊர்வலமாக சென்று தனது பிரச்சாரத்தை துவக்கினார்.

காருக்குள் உட்கார்ந்து பிரச்சாரம் செய்வது பழைய ஸ்டைல் என புதிதாக காருக்கு மேல், ஏறி பரபரப்பு பிரச்சாரம் செய்ய வந்த சோனியாவுக்கு திடீரென கடும் காய்ச்சல் ஏற்பட்டு விட்டது. காய்ச்சல் அடிக்கிறது மன்னா என்பது போல, ஆரம்பித்த அரை நொடியிலியே மூட்டை முடிச்ச கட்டிக்கிட்டு பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு மேடம் எஸ்கேப். சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா என அட்டகாசமாக வந்தவரை சோனி-யா நோயாளியாக மாத்தினது யாரு என அவர்களது காங்கிரஸ் ரகசிய படை விசாரிக்கையில் இதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என புள்ளி இல்லாத விவரங்கள் தெரிவிக்கின்றன.

மோடி வித்தை, மோடி வித்தைனு கேள்வி பட்டுருப்போம். ஆனா இதுதான் உண்மையான மோடி வித்தை. உ.பி.,யில பிரச்சாரம் நேத்து பண்ணப்போ ஒண்ணும் ஆகலை. ஆனா, இன்னைக்கு வாரணாசியில காலடி எடுத்து வச்ச உடனே காய்ச்சல் வரக் காரணம் இந்த மோடி மஸ்த்தான் வித்தைதானாம். மோடி சைவம் என்பதால், முட்டைக்கு பதிலாக முட்டைகோஸில் மந்திரம் செய்து பிரச்சாரத்திற்கு வந்த சோனியாவிற்கு பூங்கொத்து கொடுப்பது போல் கொடுத்துள்ளனர். அதை அலைந்து கொண்டு வாங்கியதன் விளைவு தான் இதற்கு காரணம் என முட்டை கோஸ் மந்திரம் செய்த சாமியார் தனது புகழை பிரபலப்படுத்த யூடியூபில்
வெளியிட்டுள்ள வீடியோ மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போ அந்த சாமியாருக்கு காங்,, கட்சியினர் என்ன மந்திரம் செய்யபோகின்றனரோ! ஸ்வாகா!

பகிர்

There are no comments yet