சென்னை: கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மத்திய அமைச்சராக ராஜா இருந்த போது 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. கடந்த 2010ம் ஆண்டில், 2ஜி ஏலத்தில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சி.ஏ.ஜி., புகார் கூறியது. இந்தியாவில் நடந்த ஊழல்களில் இது மிகப்பெரியதாக கருதப்பட்டது. இதனையடுத்து ராஜா பதவி விலகினார். இந்த வழக்கு தொடர்பாக ராஜா மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். முறைகேடு தொடர்பாக வழக்கு டில்லி சி.பி.ஐ., கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் ராஜா தனது தரப்பு நியாயங்கள் குறித்து ” ஐ ஆம் நான்சென்ஸ்” என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகம் வரும் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்த புத்தகத்தில், “ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு, மன்மோகனால் அங்கீகரிக்கப்பட்ட முடிவுக்கு தான் பலிகடா ஆக்கப்பட்டேன். 2ஜி முறைகேடு என வர்ணிக்கப்படுவது கார்பரேட்களுக்கு இடையிலான யுத்தமே காரணம்.a-raja1

என்னை யார் உங்களை நிர்பந்தித்தார்கள்? யார் ஆசை காட்டினார்கள்? நீரா ராடியா எதுக்கு கனிமொழிகிட்ட பேசணும் ? கலைஞர் டிவி க்கு 214 கோடி எதுக்கு குடுத்தாங்க? 26 ஆம் தேதி வைத்த ஏலத்தேதியை யாரு மாற்ற சொன்னார்கள்? ஏர் செல் நிறுவனம் இதில் எங்கு வந்தது? அத வைத்தவுடன் எப்படி மாக்சிஸ் நிறுவனத்துக்கு உடனே 2ஜி கிடைத்தது ? ஏலம் எடுக்க கட்டுமானக்கம்பனி , லெட்டர்பாட் பாட் கம்பெனியெல்லாம் என் வந்தது எடுத்தது?சாதிக் பாட்சா யாரு? அவரை சிபிஐ இந்த கேஸ் சம்பந்தமா ஏன் விசாரிக்கணும்? அப்படி விசாரித்தவுடனே அந்த சின்ன வயசுல அவரு ஏன் தூக்கு மாட்டிக்கணும்? இதற்கெல்லாம் பதிலை ரெடி பண்ணி என் தலைவர் கருணாநிதியிடம் கொடுத்தேன். அதற்க்கு அவர் நீ என் வளர்த்த கடா, தற்போது இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் டெல்லி சிபிஐ தனிநீதிமன்றத்தில் அக்டோபர், நவம்பரில் நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற உள்ளது. எனவே, அப்போது இதெல்லாம் சொல்லு கொஞ்சம் சென்சேஷனலா இருக்கும் என்றார். அதோடு செப்டம்பர் மாசம் முப்பெரும் விழா வருதாம். அதுக்கு முன்னாடி 12 ம் தேதி பக்ரீத்தும் வருதாம். அன்னிக்கு கிடா வெட்டுவாங்களாம் சொல்லி என்னை ரெடியா இருக்க சொல்லிருக்கார் என்று 2-ஜி புகழ் ஆண்டிமுத்து ராசாவின் ‘ஐ ஆம் நான்சென்ஸ்’ புத்தகத்தில் எழுதியிருப்பதாகக் கூறினார்.

There are no comments yet