நியூ டெல்லி: பாகிஸ்தான் படைகள் அவ்வப்போது காஷ்மீர் பகுதியில் ஊடுருவி இந்திய ராணுவ வீரர்களை தாக்குவதை வழக்கமாகக் கொண்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு புரியும் விதத்தில் கடுமையான கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி உருது படித்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து பிரதமர் மோடி வெளியிடாத அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தானும் எனது அமைச்சரவை சகாக்களும் குறிப்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோர் கடந்த 2 மாதங்களாக உருது மொழியுடன் உலகை சுற்றி பார்க்க தேவையான மற்ற மொழிகளையும் படித்து வருகிறோம். இதன் மூலம் மக்களுக்கு புரியாத பாஷை பேசி மக்களை குழப்புவது எளிதாகும். பாகிஸ்தான் பேச்சு வார்த்தையில் என்ன பேசுகிறோம் என்று மக்களுக்கு புரியாது. உள்குத்து அரசியலுக்கு பெரிதும் தடை இந்த பாஷை தான். அது தடைப்படாது. வரிப்பணத்தை ட்யூசன் பீஸ் என்று கூறி வீணடிக்கவும், ஒரு வாய்ப்பு கிடைக்கும். நேற்று நான் யூ டியூப்பில் தமிழ் நாட்டின் டண்டணக்கா புகழ் டி. ராஜேந்தரின் ஒரியா பாடல் பாடும் வீடியோவை பார்த்து, அவர் மொழிப் புலமை கண்டு வியந்தேன். எங்கள் இருவருக்கும் தாடியின் நிறம் தான் வேறு வேறு, மற்றபடி காமெடியில் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். நான் சுற்று பயணம் மேற்கொள்ளும் நாடுகள் அனைத்தின் மொழிகளையும் கற்பதுதான் எனது நோக்கம். வெறும் வாயை வைத்து கொண்டு டி.ஆர் அவர்கள் ஆப்பிரிக்க இசையை பொளந்து கட்டியது எனக்கு வியப்பாக இருந்தது, உடனடியாக அவரிடம் ஆப்பிரிக்க மொழியும், இசையும் கற்க முடிவு செய்தோம். சில சமயம், பசு மாடு மற்றும் எருமைகளை விஷயங்களை எடுத்து காங்கிரஸ், மாற்று எதிர் காட்சிகளை எங்களை தொல்லை படுத்துகிறது , எனவே எதிர் காட்சிகளை சமாளிக்க எருது பாஷை பாட்டு வித்தை பசுநேசன் ராமராஜனிடம் கற்க உள்ளேன். தமிழ் இம்சை உதவியுடன் தமிழ் நாட்டில் ஒரு மண்டலம் தங்கியிருந்து ராமராஜனிடமும், டீ.ஆரிடமும் டியூசன் செல்ல முடிவு செய்துள்ளோம். sriravishankar

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள் ஐஎஸ் தீவிரவதிகளுடன் சமரசம் பேச முற்பட்டு தோல்வியில் முடிந்தது அனைவரும் அறிந்ததே. அவருக்கு பாஷை தெரியாது தான் பிரச்னை. எங்கள் டியூஷன் கிளாசில் அவரும் பங்கற்கிறார். பேருரை நிகழ்த்துகிறேன் என்ற பெயரில் யமுனை நதிக்கரைய நாஸ்தி செய்து ‘தேசிய பசுமை தீர்பாயம்’ கண்ணில் மண்ணை தூவியதால் அவரை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். ஐஎஸ் தீவிரவாதிகள் அனுப்பிய கழுத்து அறுபட்ட மனிதரின் புகைப்படத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாபெரும் கூட்டம் ஒன்றை நடத்தி பேச்சிலேயே தீவிரவாதிகளின் கழுத்தை அறுக்க அவரிடம் திட்டம் உள்ளதாக பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இதன் முதல் கட்டமாக உலகின் பல மொழிகளின் அரிச்சுவடிகள் சேகரிக்க 3000 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது, ‘நிலா நிலா ஓடி வா’ பா பா பிளக் ஷீப்’ போன்ற நர்சரி ரைம்ஸ் உருது உள்ளிட்ட மற்ற மொழிகளில் பெயர்க்கப்பட உள்ளத்து. மோடி மற்றும் அமைச்சரவை சகாக்களுக்கும் நர்சரி சீருடை தைக்க அமெரிக்காவின் பிரபல பேஷன் டிசைனர்களிடம் முன்பணம் தரப்பட்டுள்ளது என்பது கூடுதல் செய்தி.

There are no comments yet