பிரேசில் / புது டெல்லி: ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்தியாவின் தீபா கர்மாகர் மிகுந்த சிரமத்துடன் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். வில் வித்தை பிரிவில் தீபிகா குமாரி, பம்பலா தேவி, லக்ஷ்மி ராணி குழு காலிறுதியில் ரஷ்யாவிடம் வெற்றியை தவற விட்டது. மகளிர் ஹாக்கியில் இந்தியா 2-2 என்ற கோலுடன் ஜப்பானிடம் டிரா செய்து 2வது சுற்றுக்கு நுழைந்தது. மகளிர் இரட்டையர் பிரிவில் களமிறங்கிய சானியா மிர்சா, சீனாவிடம் தோற்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் பயஸ் போபண்ணா ஜோடி முதல் சுற்றுலேயே மண்ணைக் கவ்வியது..

18-1442544395-cow-urine34இந்த ‘திரிசங்கு’ நிலையைக் கண்டு மத்தியில் ஆளும் பா.ஜ.க கலக்கம் கொண்டுள்ளது. +2 தேர்வு முடிவுகள் போல ஒலிம்பிக்கிலும் பெண்கள் ஆதிக்கம் அதிகமிருப்பதாலும், ஆண் வீரர்களுக்கு ஊட்டம் அளிக்கவும், புதிய ‘சோத்து மூட்டை’ மெனு ஒன்றை தாயார் செய்து சமைத்து வழங்க பிரதமர் மோடியின் பா.ஜ.க அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி விமானத்தில் பயணம் செய்தவரே, ஆகாயத்தில் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டி: “காலை வெறும் வயிற்றில் வடிகட்டாத பசு கோமியமும், பிற்பகல் கங்கா நீரில் போட்ட தேநீரும், மதியம் வயிற்றை காயப் போடவும், இரவில் வரட்டியை கொஞ்சம் சின்ன டிசைனில் பசும் சாணி கலந்த ரொட்டியாகவும் தர முடிவு செய்துள்ளோம். உலகத்திலேயே ஊட்டச்சத்துள்ள ஆகாரமாக இது அமையும். cow urine

சீனா போன்ற நாடுகளில் பல்லி, பூரான், தேள், நட்டுவக்காலி, பாம்பு ஜூஸ் சர்வ சாதாரணம். அவர்களுக்கு பதிலடி கொடுக்க இந்தியாவில் மலிந்து கிடக்கும் பசு ஐட்டங்கள் பெரிதும் உதவும் என்று பா.ஜ.க நம்புகிறது.

தலித்துக்கள் மீதான ஆயுத தாக்குதலுடன் கூடிய கொடிய வீர விளையாட்டுக்க்ள் மட்டும் போதாது, ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் நம் நாடு பல மெடல்களை கைப்பற்ற இந்த மாதிரி மேக் இன் இந்தியா உணவு வகைகளை பின்பற்ற வேண்டும்” என்று வீரர்களுக்கு ஊக்க மருந்து கொடுப்பது போல பேசினார். மேலும் கங்கா நீரின் ஊக்க பானத்தை யை புரோமொட் செய்ய, மோடி முகமலர்ச்சியுடன் ‘தாமரை’ மார்க் கங்கா நீரிலிருந்து தயாரிக்கப் பட்ட தேநீர் அருந்தும் விளம்பரமும் தயாராகி ஷூட்டிங் முழு வீச்சத்துடன் நடைபெற்று வருகிறது.. விரைவில் இந்த விளம்பரம் தொலைக்கட்சியில் வெளிவர உள்ளது.. இவ்விளம்பரத்தை ‘டீ’ கடைகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மோடி வெளியிடப் போவதாக வெளிவராத செய்திகள் தெரிவிக்கின்றன.

பகிர்

There are no comments yet