சென்னை: சமீபத்தில் டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி.திருச்சி சிவாவுக்கும், அதிமுக எம்.பி.சசிகலா புஷ்பாவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சசிகலா புஷ்பா நடந்து கொண்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மாநிலங்களவையில் நேற்று சசிகலா புஷ்பா பேசியபோது, ஜெயலலிதா தன்னை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும், அறைந்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இந்நிலையில், இன்று திருச்சி சிவாவை அடித்த சசிகலா புஷ்பாவிற்கு பாதுகாப்பு வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியினருடன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் வெளிநடப்பே செய்யாத நான் இன்று வெளிநடப்பு செய்தது எதற்காக என்பது குறித்து மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

சட்டசபை வளாகத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:–

நிருபர்: இன்று எதற்காக வெளி நடப்பு செய்தீர்கள்? தினமும் தான் வெளி நடப்பு செய்கிறீர்களே, அப்புறம் எதற்கு சட்ட சபைக்கு செல்கிறீர்கள்?Trichysiva-sasikalapush

ஸ்டாலின்: திருச்சி சிவாவை அடித்த சசிகலா புஷ்பாவிற்கு பாதுகாப்பு வேண்டும் என்ற எங்களை பேசவிடாமல் செய்ததால் வெளி நடப்பு செய்தோம்

நிருபர்: அவர்கள் தான் பேச விடவில்லையே அப்புறம் எதற்க்கு சட்ட சபைக்கு போறீங்க?

ஸ்டாலின்: வெளி நடப்பு செய்வதற்கு தான் நாங்கள் சட்டசபைக்கு போகிறோம் .

நிருபர்: திருச்சி சிவா, உங்க கட்சி தானே, அடிபட்ட அவரை விட்டுட்டு, அடி கொடுத்த உங்க எதிரிக் கட்சியை சேர்ந்த சசிகலா புஷ்பாவிற்கு பாதுகாப்பு கேட்கிறீர்களே.

ஸ்டாலின்: எங்கள் கட்சியினர் எதையும் தாங்கும் இதயமும், கன்னமும் உடையவர்கள். இதை விட கேவலமாக அடி வாங்கியிருக்கிறோம், இந்த அறையெல்லாம் எம்மாத்திரம்.

நிருபர்: நீங்கள் தலைவர் பதவிக்கு வர வாய்ப்பு இல்லையா?

ஸ்டாலின்: தலைவர் அனுமதித்தால் தலைவராக வருவேன், அதுவரை இப்படித்தான் .

நிருபர்: இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி சொல்லி கொண்டிருக்க போறீங்க?

ஸ்டாலின்: அதையும் தலைவர் தான் கூற வேண்டும்.

நிருபர்: இந்த உலகில் பாவப்பட்ட தலைவர்கள் நீங்களும் இங்கிலாந்து சார்லசும்தான். இவ்வளவு வயசாகியும் தலைவர் பதவிக்கு வர முடியவில்லை இல்லையா?

ஸ்டாலின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக விழுகிறது ( மனதிற்குள் நான் சாவதற்குள் இந்த கழகத்திற்கு தவைவராக வருவேன்னு நம்பிக்கை இல்லை) மைண்ட் வாய்ஸ் எல்லோருக்கும் கேட்கிறது. பக்கத்தில் இருந்த துரைமுருகன், கையில் இருந்த கர்சீப்பால் ஸ்டாலின் கண்ணீரை துடைக்கிறார். மா.சுப்ரமணியமும் சேர்ந்து அழுகிறார்.stalin karuna

நிருபர்: நீங்களும் அவுரங்கசீப் போல தந்தையிடமிருந்து கட்சி தலைமை பொறுப்பை பிடுங்கி கொள்ளலாமே?

(ஸ்டாலின் முகத்தில் புன்னகை பூக்கிறது. மறுபடி முகத்தை மாற்றிக்கொள்கிறார்)

ஸ்டாலின்: அவ்வாறு செய்தால் தமிழக மக்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள்

நிருபர்: இன்னும் எத்தனை நாளைக்கு இளைஞர் அணி தலைவராவே இருக்க போகிறீர்கள்?

ஸ்டாலின்: கலைஞர் இருக்கும் வரை நான் இளைஞர் அணி தலைவராவே இருப்பேன்.

நிருபர்களுக்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன். பத்திரிகைகளில் எழுதும் போது அறுபது வயது முதியவர் என்று யாரையும் எழுதாதீர்கள். அறுபது வயது இளைஞர் என்று எழுதுங்கள். இதை நான் பொதுவாகத்தான் சொல்கிறேன், எனக்காக என்று நினைக்க வேண்டாம்..

நிருபர்: உங்களுக்கு பிறகு உங்கள் வாரிசை இந்த கட்சிக்கு தலைவராக்குவீர்களா? வீரமணி அவர் மகனை அந்த கட்சிக்கு செயலாளராக்கி விட்டாரே ?

ஸ்டாலின்: உண்மைதான் தி.க. கட்சியில் கோடி கணக்கான சொத்துக்கள் இருக்கு. வேறு யாருக்கும் போய் விடக்கூடாதென்று வீரமணி அவ்வாறு செய்தார். நான் வந்ததே வாரிசு அரசியல் தானே? ஆனால் இது நிச்சயம் சங்கர மடம் இல்லை

நிருபர்: நாளை சட்ட சபைக்கு வருவீர்களா?

ஸ்டாலின்: நிச்சயம் வருவோம், வெளிநடப்பு செய்வோம் ’

நிருபர்: கடைசியாக ஒரு கேள்வி, நீங்கள் புதியதாக ஒரு திட்டம் வைத்திருப்பதாக சொன்னீர்களே அது என்ன?

ஸ்டாலின்: இனிமேல் சட்ட சபைக்கு வராமல் அண்ணா அறிவாலயத்தில் இருந்தவாறே வெளி நடப்பு செய்யலாம் என்று நினைத்துள்ளோம்.

( நிருபர் மயக்கம் போட்டு விழுகிறார்.)

There are no comments yet