சென்னை: சேலம் ஐ.ஓ.பி., வங்கியிலிருந்து சென்னை வந்த விரைவு ரயிலில், பணம் கொண்டு வரப்பட்ட பெட்டியின் மேல் கூரையில் ஓட்டை போடப்பட்டு, நான்கு மரப்பெட்டிகள் உடைக்கப்பட்டு, ஐந்து கோடி ரூபாய் கொள்ளையடித்து சென்றது அனைவரும் அறிந்ததே.இது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், ரயில்வே போலீஸ் ஐ.ஜி அலுவலத்திற்கு இன்று ஷேர் ஆட்டோவில் வந்த கொள்ளையர்கள், கொள்ளையடித்த பணம் அத்தனையும் திருப்பி கொடுத்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொள்ளையர்கள் அனைவரும் ரயில்வே போலீஸ் ஐ.ஜியிடம் செல்லாத நோட்டுக்களை ஏன் எடுத்து வந்தீர்கள் என வாக்குவாதம் செய்ததாகவும், தங்களது நேரத்தை ஐ.ஓ.பி.வங்கி விரயம் செய்ததற்காக ஐ.ஓ.பி.வங்கியின் மீதும், ரிசர்வ் பாங்க் மீதும் வழக்குத் தொடர இருப்பதாகவும் தெரிகிறது. இவர்களுக்கு உதவ ஸ்வாதி கொலை புகழ் ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் சென்னை ஐகோர்ட்டில் விவரம் தெரியாத இந்த கொள்ளையர்கள் அப்பாவிகள் என்று மனுத் தாக்கல் செய்துள்ளார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்குள் சேலம் – சென்னை விரைவு ரயிலில் பணம் கொண்டு வருவதும், சேலம் உள்ளிட்ட பகுதி களுக்கு சென்னையில் இருந்து பணம் எடுத்து செல்வதும் வாடிக்கையான நிகழ்வு. இதுபற்றி நன்கு தெரிந்த நபர்கள் தான், கொள்ளையர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அந்த கருப்பு ஆடு யார் என, போலீசார் விசாரனை செய்து சேலம் பட்டமடை பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த நான்கு கருப்பு ஆடுகளை போலீசார் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது.

There are no comments yet