புது டெல்லி: சுதந்திர தினம் வருகின்ற 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தேசியச் சின்னங்கள் முன் செல்ஃபி எடுக்க, ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வருகின்ற 15-ம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையம் உள்பட முக்கியமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தேசியச் சின்னங்கள் முன் செல்ஃபி எடுக்க, ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடையினால் செல்பி மோக பிரதமர் மோடி விரக்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியும், சீன பிரதமர் லீ-கெகியாங்கும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பிபடம், உலகில் தலை சிறந்த ‘செல்பி’ படமாக போர்பஸ் பத்திரிகை பாராட்டியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் செல்பி எடுப்பதில் பிரதமர் பிசியாக இருந்து வருவதால், இந்த ஒரு வார தடையினால் என்ன செய்வதென்றே தெரியாமல் மனது ஒடிந்து அயர்லாந்து சென்று ஓய்வு எடுக்கவும் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பிரதமர் மோடி சுதந்திர தின கொண்டாட்டங்களை புறக்கணிக்கவும் வாய்ப்பு உள்ளது என பசு மாடு மேய்க்கும் ப.ஜ.க செய்தியாளர் தெரிவிக்கிறார்.

There are no comments yet