புது டெல்லி / இலினிய்ஸ், அமெரிக்கா: நாடாளுமன்ற தேர்தலில் நடிகையும், பிரதமர் மோடியின் பிரதம ரசிகையுமான ராக்கி சாவந்த் ‘பச்சை’ மிளகாய் சின்னத்தில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்து டெப்பாசிட் தொகையை இழந்தது அனைவரும் அறிந்ததே. ‘சரிந்த’ மார்கட்டை மீட்டெடுக்க பல ஸ்டுண்டுகள் அடித்து வருகிறார் ராக்கி. இதன் இடையே அமெரிக்காவில் இலினாய்ஸ் மாகாணத்தில் வசிக்கும் இந்தியர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ராக்கிக்கு அழைப்பு வந்தது. அங்கு வந்த ராக்கி சாவந்தை பார்த்ததும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், விழாவில் கலந்து கொண்டவர்களும் அதிர்ச்சியடைந்தனர் – முழி பிதுங்கினர். பிரதமர் மோடியின் தீவிர ரசிகையான ராக்கி சாவந்த், கவர்ச்சி ஆடையணிந்து வந்ததுடன், முன்புறமும் பின்புறமும் மே டு பள்ளங்களில் ‘மோடி’ யின் படங்கள் பெரிய சைசில் அச்சடித்து இருந்தார். போதாகுறைக்கு தூரத்தில் நின்றவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தார், அவர் அளிக்காத பேட்டி
யில், “மோடி எனக்கு ரொம்ப புடிக்குது, மோடி ஏரொப்ளேன் மேலே பறக்குது, நான் மோடி டிரஸ் போட்டு பிளையிங் கிஸ் கொடுக்குது,” என்று மழலை இந்தியில் கொஞ்சினார்.rakhi41

இந்த போட்டோக்களை இன்ஸ்டாகிரமில் பார்த்த பிரதமர் மோடி, ‘உடனடியாக ராக்கியை செல்போனில் தொடர்பு கொண்டு, அந்த துணி தைத்த ஒட்டு டைலரின் அட்ரசை பெற்றுக் கொண்டு, வெளியிடாத அறிக்கையில் கூறி இருப்பதாவது: “ரக்கி அம்மையாரின் உடை என்னை மிகவும் கவர்ந்தது. நான் அரசியல் நெளிவு சுழிவு கற்றவன். அதற்கேற்ப அம்மையாரின் நெளிவு வளைவுகளில் என் படம் அச்சிட்டது மிகவும் பொருத்தமானது. வானில் எப்போதும் பறந்து கொண்டிருக்கும் நான் ‘பரந்த’ மனதுடையவன் , ராக்கி சாவந்த் ‘திறந்த’ மனதுடையவர். மத்திய ஜவுளி அமைச்சகமும், காதி மற்றும் கைத்தறி துறையும் தங்கை ராக்கியை தொடர்பு கொண்டு, அவருக்கு நெசவாளர்களின் ராணி என்ற பட்டம் rakhi-31கொடுக்கு ஏற்பாடு செய்துள்ளேன். மேலும் வரும் உ.பி. தேர்தலில் ராக்கியை ப.ஜ .க. வின் விளம்பர தூதராகவும் நியமிக்க முடிவு செய்துள்ளேன்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆடையை வரும் சுதந்திர தினத்தன்று ஏலம் விட ஏற்பாடு செய்யப்படும். அதன் மூலம் கிடைக்கும் தொகையில் இந்தியாவின் உலக வங்கிக் கடனை அடைத்துவிட்டு, மீதமுள்ள சில்லறை காசில், பாராளுமன்ற வளாகாத்தில் உள்ள நாயர் டீ கடையில் வைத்த கடன் பாக்கி 34 ரூபாய் 50 காசுகள் பைசல் பண்ணப்படும். காற்றோட்டமான் இந்த உடையை அரசு செலவில் தைத்து பசு காவலர்களுக்கு வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பகிர்

There are no comments yet