நெய்வேலி: கடலுார் மாவட்டம், நெய்வேலியில் காமராஜர் ஆட்சியில் துவங்கப்பட்ட, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.), தற்போது வைர விழாவை கொண்டாடி வருகிறது. நெய்வேலி மட்டுமின்றி, ஜெயங்கொண்டம், சீர்காழி, துாத்துக்குடி என தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், ராஜஸ்தான், ஒடிசா, உத்தர பிரதேசம், கர்நாடகா என பிற மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகிய இடங்களிலும், பழுப்பு நிலக்கரி மற்றும் மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்கிறது. இதன் காரணமாக, என்.எல்.சி., எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், ‘என்.எல்.சி., இந்தியா லிமிடெட்’ என, பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இந்த பெயர் மாற்றத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேருவும், காமராஜரும் நெய்வேலிக்கு வருகை புரிந்து தொடங்கிய மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்துக்கு ‘நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்’ என்று பெயர் சூட்டினர். இப்போது , நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பெயரை ‘என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ என்று மாற்றி உள்ள மத்திய அரசுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நான் வை.கோபால்சாமி என்ற என் பெயரை வை.கோ என்று சுருக்கி வைத்துள்ளது போல் ‘நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் (Neyveli Lignite Corporation Limited)’ என்.எல்.சி (N.L.C) என்று மத்திய அரசு சுருக்க நினைத்து எங்களை கிறுக்குப் பிடிக்க வைத்துள்ளது. இந்த உலகில் எனக்கு மட்டுமே பெயரை மாற்றவும், சுருக்கவும் அதிகாரம் உள்ளது. இந்த மோடி அரசின் அதிகார துஸ்பிரயோகத்திற்கு அளவில்லாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.
There are no comments yet
Or use one of these social networks