சென்னை: கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நாயாகனாக நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ படம் வெளியீடு தாமதமாகும் என்று தெரிகிறது. முதல் கட்ட படப் பிடிப்பு முடிந்த நிலையில் கமல் காலில் அடி பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். படத்தின் எடிட்டர் ஜேம்ஸ் ஜோசப் தனது மனைவி விபத்துக்குள்ளானதால், படத்தில் இருந்து விலகினார். ஒளிப்பதிவாளர் ஜெயகிருஷ்ணா பாஷை தெரியாததால் கமல்ஹாசனால் நீக்கப்பட்டார்.
இப்படி அடி மேல் அடி வாங்கும் இந்த படத்தின் பிரச்னைகளின் பிண்ணனியில் வைகோவின் “ராஜதந்திரம்” வேலை செய்வதாக நம்பத்தகாத சில தகவல்கள் கசிந்துள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் வைகோ தனது குயுக்தியால் தேமுதிக வை உடைத்து விஜயகாந்தின் செல்வாக்கை அதள பாதாளத்தில் தள்ளி டெபாசிட் இழக்கவைத்து மண்ணைக் கவ்வ வைத்தார். இதை கிண்டல் அடிக்கும் விதாமாக ‘சபாஷ் நாயுடு’ பட தலைப்பு இருந்ததால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த வைகோ இரண்டு தொண்டர்களுக்கு டீ, பன் வாங்கிக் கொடுத்து அழைத்துக்கொண்டு நடைபயணமாகவே அமெரிக்கா சென்று படப்பிடிப்பில் ரகளையில் ஈடுபட்டதாக நமது கப்சா நிருபர் தெரிவித்தார்.
எப்போதும் தெளிவாக குழப்பும் கமல் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு “நான் விஸ்வரூபம் படம் எடுத்தேன் என்னடா இந்த வைகோவால் சபாஷ் நாயுடு பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறதே?” என்று நொந்து கொண்டாராம். “சபாஷ் நாயுடு பேரு நல்லாத்தான் இருக்குன்னும் சொல்லலாம், நல்லா இல்லைனு சொன்னாலும் சொல்லலாம்” என்று கமல் வைகோவிடம் சமரசம் பேசியதாகத் தெரிகிறது. இதனிடையே கபாலி படம் வெளியாகி, இரண்டு நாட்கள் மட்டும் ஓடி “கபாலி ஒரு கலைப்போலி” என்று நிரூபித்தது. தாணு, ரஞ்சித் இருவரும் செய்த விற்பனை உத்தி கமலை கவர்ந்துள்ளதால், கடைசி காலத்தில் கல்லாவை நிரப்பிக் கொள்ள புது யோசனை ஒன்றை கமல் செய்துள்ளார். சமீபத்தில் கமல், தான் பேசியதைப் போலவே ஒரு மிமிக்ரி கலைஞர் “கபாலிடா” என்று முடியும் வசனத்தை பேசியுள்ளதை யூடியூபில் பார்த்துள்ளார்.
இந்த வசனத்தை காப்பியடித்து உல்டாவாக்கி படத்தில் “கமல்ஜீடா” என்று முடிவது போல் ரகசியமாக டப்பிங் செய்து இணைத்து விட்டு, படத்தின் தலைப்பையும் “கபாலி பார்ட் டூ” என்று மாற்றி விடலாம் என்று முடிவு செய்துள்ளார். சென்ற முறை பட ரிலீசுக்கு முன்பே இண்டர் நெட்டில் விட முயர்ச்சித்து தோல்வி கண்டதால், இந்த முறை படத்தை பென் டிரைவவில் காப்பி எடுத்து மெரீனா பீச், பார்க் போன்ற இடங்களில் கூறு கட்டி விற்க முடிவு செய்துள்ளார் என கமலுக்கு நெருக்கமான கவுதமி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் ரஜினி படம் விளம்பரம் செய்தது போல, ஷேர் ஆட்டொக்களிலும், ஏடிஎம் கார்டுக்கு பதில் ரேஷன் கார்டுகளிலும், தனது படத்தை விளம்பர படுத்த உள்ளதாக தெரிகிறது. இந்தப் பட வெளியீட்டின் போது ஏதாவது பிரச்சினை வந்தால், கூகிள் மேப்பில் தேடினால் கூட கிடைக்காத ஒரு தீவுக்கு போகப் போவதாக கண் கலங்கி தன் ‘நரி’ ஊளை இடுவதை போன்ற அழுகையினை நடித்து காட்டினார் கமல் ஹாசன் என நமது நிருபர் தெரிவிக்கிறார்
There are no comments yet
Or use one of these social networks