சென்னை: சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரை கர்நாடகா அரசு விடுதலை செய்தது. நாட்டின் 70 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நன்னடத்தை அடிப்படையில் கர்நாடகாவில் சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 348 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கர்நாடகா அரசு உத்தரவிட்டது. மைசூரு மத்திய சிறையில் இருந்து 52 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதில் வீரப்பன் கூட்டாளிகளான அன்புராஜ், தங்கராஜ், அப்பர் சாமி, சித்தன் ஆகிய நான்கு பேரும் இடம் பெற்றிருந்தனர். மைசூரு சிறையில் 4 பேரும் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கர்நாடகா அரசு உத்தரவிட்டதையடுத்து அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து, நமது கப்ஸா நிருபருக்கு நாம் தமிழர் கட்சி அதிபர் சீமான் அனுப்பிய அவசர ஈமெயில் அனுப்பி, பேட்டியளித்தார், அப்போது சீமான் கூறியதாவது: சட்டமன்ற தேர்தலில் கொடுத்த காசுக்கு நல்லா கூவினேன், அதுக்கப்புறம் என்னை யாரும் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். தமிழன் சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரை கர்நாடகா அரசு விடுதலை செய்துள்ளது, அதற்கான எனது நன்றியை தாயுள்ளம் கொண்ட புரட்சி தலைவி அம்மாவிற்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நான்கு பெரும் என் அண்ணன் சந்தன கடத்தல் வீரப்பனுக்கு நிறைய உதவி செய்துள்ளனர். மரம் அறுப்பது, சமயத்தில் வனக்காவலர்களின் கழுத்தை அறுப்பது போன்ற வேலைகள் செய்து நமது தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இந்த நான்கு பேருக்கும் பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி அடுத்த தேர்தல் வரை அல்லது யாராவது பெட்டி கொடுக்கும் வரை போராட்டம் செய்யும் என்று ஆவேசமாகப் பேசினார்.
சீமானின் இந்த போராட்டத்திற்கு ஏதாவது விஷயம் கிடைக்காதா என்று ஏக்கத்தில் இருக்கும் டம்ளர்கள் ராமதாஸ், வைகோ,திருமா ஆகியோர் பெட்டியில் பங்கு என்ற நிபந்தனையுடனான ஆதரவு தெரிவித்துள்ளதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks