சென்னை: இன்று தே.மு.தி.க. தலைமையகத்தில் நடந்த சுதந்திர தின திண்டாட்டத்தில் தலைவர் விஜெயகாந்த கொடியேற்றி வைத்து லட்டுகளை வழங்க முயற்சித்ததாக தெரிகிறது. இது பற்றி கூறப்படுவதாவது:சட்டமன்ற தேர்தலில் வைகோ கொடுத்த கடுக்காய், சந்திரகுமார் கொடுத்த அல்வா, கடைசியில் வாக்களர்கள் கொடுத்த டேக்கா போன்றவற்றால் ஏற்பட்ட கடும் துயரத்தை மறைத்தபடி தேமுதிக தலைமையத்துக்கு வந்த கேப்டனுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. காரணம் அங்கு அவரும், அவரது குடும்பத்தினரைத் தவிர யாரையும் காணவில்லை.

எப்போதும் போல், தொண்டர்கள் கூட்டம் படையெடுத்து வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தட்டு நிறைய லட்டு வாங்கி வைத்து இருந்ததால், என்னடா நம்ம லட்டுக்கு வந்த சோதனை என்றவர் மச்சான் சுதீஷை கோடம்பாக்கம் அனுப்பி அங்கிருந்த துணை, இணை நடிகர்களை லட்டு சாப்பிட அழைத்து வர சொன்னதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடும் முயற்சி செய்தும் ஐம்பதுக்கும் குறைவானவர்களே கலந்து கொண்டதால் விஜயகாந்த் கடுப்ப்புடன் காணப்பட்டார். ஆளில்லாத டீ கடையில் ஆத்துவது போல, அங்கு பந்தோபஸ்தில் ஈடுபட்டு இருந்த போலீசரை உற்று நோக்கினால், அவர்களும் கேப்டன் போலீஸ் அதிகாரியாக நடித்த படங்களில் கான்ஸ்டபில் வேடத்தில் தோன்றியவர்கள் என்பதும் தெளிவாக தெரிந்தது. அங்கு வந்த சில மீடியாக்காரர்கள் சாப்பிட ஆளில்லாமல் ஈ மொய்த்துக் கொண்டிருந்த லட்டுகளை புகைப்படம் முயன்ற பொது, கேப்டன் தூக்கி அடுச்சுருவேன் பாத்துக்க என்று சொல்லி தூ என்று துப்பினார்.vijayakant-flag-hoisting4-16-1471319184

அருகில் இருந்த பிரேமலதா, மச்சானை கோட்டையில் தான் கொடி ஏற்ற முடியவில்லை, கட்சி அலுவலகத்திலாவது கொடி ஏற்றி லட்டு கொடுக்கலாம் என்று நினைத்தது கூட்டி வந்தேன், நமக்கு இன்னிக்கு நேரம் சரியில்லை என்று தலையில் அடித்துக்கொண்டார் என அருகிலிருந்த துணை நடிகர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

சட்டசபைத் தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் கை கோர்த்ததில் இருந்து தான் தேமுதிக வுக்கு கெட்ட காலம் பிறந்தது என்று நினைத்த கேப்டன், மீத முள்ள லட்டுகளை, தனது குலதெய்வமான திருப்பதி ஏழு மலையான் தேவஸ்தானத்துக்கு கொடுத்துவிட முடிவு செய்துள்ளதாகவும் இதன் மூலம் தேமுதிகவுக்கு நல்ல காலம் பிறக்கும் என்றும் நமது கப்சா நிருபரிடம் தெரிவித்தார். இறுதியாக தனது பாணியில் “தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை ‘லட்டு’ என்று நாக்கை கடித்து “ஹாங்” என்று ஓசை எழுப்பினார்.

பகிர்

There are no comments yet