சென்னை: வாக்காளர்களை பணத்தால் வென்ற அ .தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ க்களால் தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு அனைவரும் அறிந்ததே. நாடகத்தின் ஒரு பகுதியாக நேற்று எதிரிக் கட்சி தலைவர் ஸ்டாலின், என்னை ஒத்த வார்த்தை சொல்லி திட்டி விட்டார்கள் என்று அழுது கொண்டே, சபாநாயகர் தனபாலை நோக்கி நாட்டாம தீர்ப்ப மாத்திச் சொல்லு என்று ஆவேசமாகக் கூறினார்.
இதற்கு சபாநாயகர் கூறும்போது, அடக்கொடுமையே நான் இன்னுமே தீர்ப்பே சொல்லவில்லையே. அம்மா சொல்லாம நான் எப்படி தீர்ப்பு சொல்ல முடியும். அதோட என்னோட தீர்ப்பு சொல்ற சொம்பு அம்மாகிட்டதான் இருக்கு, அதனால இந்த கால கட்டத்தில்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று என்னை வற்புறுத்தக்கூடாது என்றார். அப்போது அந்தப் பக்கம் வந்த ஜெயா, இவங்க எல்லோரையும் தூக்கி வெளியே போடு, என்றவுடன் 50-க்கும் மேற்பட்ட அவைக்காவலர்கள் அவைக்குள் வந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் குண்டு கட்டாக தூக்கி வந்து, சட்டசபை வளாகத்தில் விட்டனர்.
இது குறித்து ஸ்டாலின் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பெட்டியில் கூறியதாவது: தி.மு.க., உறுப்பினர்களின் செய்கைக்காக வெட்கப்படுகிறேன்; வேதனைப் படுகிறேன், வருத்தப்படுகிறேன், துக்கப்படுகிறேன், துயரப்படுகிறேன். என் தந்தை நேற்று சட்டசபை வாசல் வரைக்கும் வந்து கையெழுத்து போட்டுவிட்டு விட்டார். அது பொறுக்காத ஜெயாதான் இதற்கெல்லாம் காரணம். ஆனால் இந்த ஒரு வார இடை நீக்கத்தால் எங்க எம்.எல்.ஏ க்களுக்கு நல்ல ஜாலிதான், வெட்டியா வெளி நடப்பு செய்யாம என் தானைத் தலைவர் கலைஞருடன் மானாட, மயிலாட பார்க்கலாம் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks