தி.மு.க. தலைவர் கருணாநிதி சுதந்திர திண்டாட்டதின் போது சட்டசபைக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு கிளம்பிச் சென்றார். சட்டசபைக்கு வந்த கருணாநிதிக்கு ‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே’ பாடல் பாடி பேண்டு வாசித்த திமுக தொண்டர்கள், திமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாநிதிக்கு சிறப்பு இருக்கை வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது. 5 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. இதனால் சட்டசபைக்கு ஒரே ஒரு நாள் வருகை தரும் கருணாநிதி வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு செல்வது வாடிக்கையாக இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 2016 சட்டசபை தேர்தலிலும் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று “டாஸ்மாக்” ஆட்சி அமைந்தது. இப்படி 10 ஆண்டுகள் தன் வாழ்க்கையில் சட்டசபைக்கு வர முடியாமல் போனதற்கு இருக்கை கொடுக்காதது தான் காரணம் என்று கருணாநிதி அதிமுக மீது குற்றம் சாட்டினார்.
இது குறித்து எதிரிக் கட்சி தலைவர் ஸ்டாலின் நமது நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு பின்புறம் தலைவருக்கு முதல் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இடம், தலைவர் வந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு வசதியானதாக இல்லை, வாஸ்து படி இல்லை, குபேர மூலை கேட்டால் சனி மூலையில் இருக்கை கொடுத்துள்ளார்கள். இது ஜெயலலிதா செய்த சதி என்று பொரிந்து தள்ளினார்.

சரி தலைவர் என்னதான் சொல்கிறார் என்று நமது நிருபர் கபாலபுரத்திற்கு, மன்னிக்கவும் கோபாலபுரத்திற்கு சென்று கலைஞரிடம் இது குறித்து கேட்டபோது “பள்ளிக்கு செல்லத்தான் எனக்கு கொடுப்பினை இல்லை, சட்ட மன்றத்திலாவது கடைசி பெஞ்சில் இருக்கை கொடுப்பார்கள், விசிலடித்து ‘மானாட மயிலாட’ என் லேப்டாப்பில் பார்க்கலாம் என்று 10 ஆண்டுகளாக சக்கர நாற்காலி பஞ்சர் ஆகும் அளவுக்கு உருண்டு கொண்டு இருக்கிறேன், இந்த டாஸ்மாக் டீச்சரம்மா என் மேல் கருணை காட்டிய பாடில்லை. இந்த முறை, தெரியாமல் வேட்டி சட்டை போட்டுக்கொண்டு வந்து விட்டேன். அடுத்த முறை குடியரசு திண்டாட்டத்தின் போது அரசுப் பள்ளிச் சீருடையில் மாறு வேடத்தில் வந்து எனக்கு பிடித்தமான உதயசூரியன் வண்ணம் கொண்ட ‘ஆரஞ்சு’ மிட்டாயை கபளீகரம் பண்ணாமல் விட மாட்டேன் என்று தனது இலக்கிய த(க)ர பராசக்தி பாணியில் முழங்கினார். ஐயோ, விட்டால் போதும் என்று நிருபர் தப்பி வந்தது தனிக்கதை.
There are no comments yet
Or use one of these social networks