சென்னை: சட்டசபையில் புதன்கிழமையன்று நடைபெற்ற விவாதத்தின்போது அதிமுக உறுப்பினர் குணசேகரன் பேச்சுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர் அமளியால், திமுக உறுப்பினர்கள் அவை நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று கூறி திமுக சட்டசபை உறுப்பினர்கள் 80 பேரை ஏழு நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். இதனால் துணுக்குற்ற திமுக வினர் சட்டப்பேரவை வளாகத்தில் பேரவைக் கூட்டம் நடைபெறுவது போன்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், எதிர்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் முன்னிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சார்பில் “போட்டி சட்டசபை” கூட்டம் நடைபெற்றது. ஏராளமான டம்மி போலீசார் குவிக்கப்பட்டனர். பொதுமக்களும் இந்த போட்டி சட்டசபைக் கூட்டத்தை வேடிக்கை பார்த்ததால் கோட்டை வளாகம் காமெடியாக காணப்பட்டது. சுமார் அரை மணி நேரம் இந்த போட்டி சட்டசபைக் கூட்டம் நடைபெற்றது. போட்டி சட்டசபை கூட்டத்தில் முதல்வராக வேடமிட்ட ஸ்டாலினை மற்றவர்கள் “அம்மா” என்று அழைத்தது பார்க்கவே பரிதாபமாக இருந்தது. சபாநாயகராக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் ‘நடித்தார்’.stalin8

நடைபெற்ற இந்த கூட்டத்திற்குப் பின்னர் கப்சா நிருபரிடம் பேசிய ஸ்டாலின், “மாதிரி சட்டமன்றம் எப்படி நடக்கும் என்பதை எங்களுடைய உறுப்பினர்களைக் கொண்டு அரை மணி நேரம் நடத்தினோம் ஆனால் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.. சட்டசபை நடவடிக்கைகளை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால், யார் தவறு செய்கிறர்கள் என்பது பொதுமக்களுக்குத் தெரியும். ஆனால் பொதுமக்களுக்கு கலைஞர் டிவியில் மானாட மயிலாட தான் பிடித்திருக்கிறது. எனவே நாங்கள் மதுரை சென்று திமுக “கரகாட்ட பார்ட்டி” ஆரம்பிக்க உள்ளோம், கட்டப்பஞ்சாயத்துக்கு உபயோகப் படுத்தும் சொம்புகளை ‘புளி’ போட்டு விளக்கி கலசமாக யூஸ் பண்ண உள்ளோம். மதுரையில் ஆதிக்கம் செலுத்தும் அழகிரியை கிறுகிறுக்க வைத்த மாதிரியும் இருக்கும், கனிமொழி நடத்திய “சென்னை சங்கமம்” நிகழ்ச்சிக்கு பதிலடி கொடுத்தமாதிரியும் இருக்கும். போட்டி சட்டசபையில் “அம்மா” வாக நடித்த அனுபவத்துடன், இந்த கரகாட்ட பார்ட்டியில் நானே பெண் வேடமிட்டு குத்தாட்டம் போட்டு கூட்டத்தை கூட்டுவேன். திமுகவின் கொள்ளைகளை பரப்புவேன் மன்னிக்கணும் கொள்கைகளைன்னு சொல்ல வந்தேன். இந்த நிகழ்ச்சிகளை டம்மி தேர்தல் கணக்கெடுப்பு நடத்திய நியூஸ் ஏழரை சானல் நேரடி ஒளிபரப்பு செய்யும்.

என்னால் முதல்வர் ஆக முடியும் என்ற நம்பிக்கை போய் விட்டது. எப்படியாவது கூட்டம் கூட்டி மக்கள் மத்தியில் செல்வாக்கை தக்கவைக்கவே இந்த கரகாட்ட பார்ட்டி. என்னை அமெரிக்க பார்ட்டியில் கூப்புட்டாக, ரஷ்ய பார்ட்டியில் கூப்புட்டாக, ஏன் அயனாவரத்தில் ஒரு பேண்டு பார்ட்டியில் கூட டிரம்பெட் வாசிக்க கூட கூப்புட்டாக.. நான் தான் என் தந்தையின் சொல்லை நம்பி இந்த தள்ளாத வயதில் இளைஞர் அணி தலைவராக தவிட்டுக்கு புண்ணியமில்லாத திமுகவில் ரிட்டயர்மெண்ட் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். நமக்கு நாமே தேர்தல் பிரச்சாரம் போல எங்களுக்கு நாங்களே “கரகாட்ட கலை மாமாமணிகள்” பட்டம் வழங்கிக் கொள்ளவும் திட்டம் உள்ளது” என்று முடித்தார்.

பகிர்

There are no comments yet