சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாசாரத்துறை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பு ஆற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது குறித்து இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று தனது உடன் பிறப்புகளுக்கு எழுதாத கடிதத்தில் கூறியிருப்பதாவது: நேற்று பிரான்ஸ் நாட்டின் கலாசாரத்துறை தம்பி கமல் ஹாசனுக்கு செவாலியே விருது வழங்கி இருப்பதாக அறிந்தேன், எனக்கு மகிழ்ச்சிதான், ஆனாலும் ஒரு வருத்தம். என் உயிரே, உனக்கே தெரியும் நான் ஒரு நாடக நடிகனாக பிழைப்பை நடத்தினேன். அதன் பிறகு அரசியலில் நடிக்க ஆரம்பித்தேன். மக்கள் முன்னே நான் போடாத நாடகமா, நடிக்காத காவியமா. எது உண்மை, எது நடிப்பு என யாருமே அறிய முடியாதவாறு எனது அரசியல் நடிப்பு இருக்கிறது என எனக்கு விருது வழங்காமலேயே என்னை யாவரும் பாராட்டுவதை நீ அறிவாய்.

என்னை பின்பற்றி இன்று என் குடும்பமே கலைக்குடும்பமாக இருக்கிறது. நடிப்பின் உச்சமாக என் மகன் ஸ்டாலினும், மகள் கனிமொழியும் என் காலை வாரிசாக உங்கள் முன்பு இருப்பதை நாடறியும். இலங்கை தமிழர் நலனுக்காக கடற்கரையில் நான் இருந்த உண்ணாவிரத நடிப்பை பாராட்டி இந்திய அரசின் சார்பில் அப்போதைய ஆக்ட்டிங் பிரதமர் அன்னை சோனியா இந்திய திரைத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி, என் மகள் கனிமொழியை சிறையிலடைத்ததை நீ மறந்திருக்க மாட்டாய் என நம்புகிறேன்.TH23-KARUNANIDHI_FA_637540g

இவ்வாறு 93-வயதிலும் அசராமல் நடிப்பையே மூலதனமாக வைத்து 7-கோடி தமிழரை ஏய்ப்பதையே என் வாழ்க்கையாக வாழ்ந்து வரும் என்னை புறக்கணித்துவிட்டு ஏதோ ரெண்டு, மூன்று படங்களில் ஓவர் ஆக்ட்டிங் செய்த கமல் ஹாசனுக்கு பிரான்ஸ் அரசு ‘செவாலியே’ விருது வழங்கியிருப்பதன் மூலம் அவர்களது ஆரிய புத்தியை காட்டிவிட்டார்கள். ஒரு தமிழனுக்கு விருது வழங்கினால் எங்கே அவனுக்கு தமிழர்களின் ஓட்டு கிடைத்துவிடுமோ என்பதுதான் பிரான்ஸ் அரசின் ஈன எண்ணமாக இருக்க முடியும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. ஒரு தமிழன் பிரான்சின் பிரதமராக இருந்திருந்தால் எனக்கு இந்நிலைமை வந்திருக்குமா. எனவே வரும் உள்ளாட்சி தேர்தலில் கழகத்திற்கு வாக்களித்து இவர்களுக்கு தக்க பதிலளிப்பாய் உடன் பிறப்பே’ என்று அந்த கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.

There are no comments yet