சென்னை: கருணாநிதிக்கு துணிச்சல் இருந்தால் சட்டசபையில் வந்து பேசியிருக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசுகையில் மேலும் நமது கப்ஸா நிருபரின் கனவில் கூறியதாவது.

கடந்த தி.மு.க., ஆட்சியில் அ.தி.மு.க., உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, நான் தனியாக வந்து சட்டசபையில் பேசினேன். அந்த துணிச்சல் கருணாநிதிக்கு உண்டா?, மேலும் வெறும் 1 ரூபாய் சம்பளம் வாங்கி வயிறு வளர்க்கும் போது 28 வயதில் ஒரு குழந்தையை தத்தெடுத்து, அதற்கு உலகமே வாயை பிளக்கும் வகையில் ஆடம்பர திருமணம் நடத்திய துணிவு சுட்டுக் போட்டாலும் கருணாநிதிக்கு வருமா? . கடந்த 5 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களை சந்திக்காமலேயே, காணொளியில் மட்டுமே ஆட்சி செய்த துணிவும், உலக முதலீட்டார்கள் மாநாடு என்ற பெயரில் 200 கோடி வீணடித்த துணிவுவும் கருணாநிதிக்கு மட்டுமல்ல உலகில் வேறு யாருக்கும் வருமா?

இது மட்டுமல்லாமல் போலீஸ் பாதுகாப்பில் டாஸ்மாக் நடத்தி தமிழகத்தின் நிதிநிலையை தூக்கி நிறுத்திய துணிவு, மற்றும் தமிழக சட்டசபை நடவடிக்கைகளை நேரடி ஒளிப்பரப்பு செய்ய மறுக்கும் முரட்டுத் தனமான துணிச்சல் கருணாநிதிக்கு உண்டா? துணிச்சல் இருந்தால் இதற்கெல்லாம் சட்டசபைக்கு வந்து பதில் சொல்லட்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

There are no comments yet