சென்னை: தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த அவதூறு வழக்குகள் தொடர்பான பட்டியல் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், ஏற்கனவே உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு ஜெயலலிதா இன்னும் ஏன் பதில் அளிக்கவில்லை என கேள்வி எழப்பினர். இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர், அந்த நோட்டீஸ் ஜெயலலிதாவுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது 213 அவதூறு வழக்குகள் தொடர்ந்தது ஏன் என்பதற்கு 2 வாரங்களில் பதில் அளிக்குமாறு, ஜெயலலிதாவுக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த நோட்டீஸை மனுதாரர் தரப்பு வழக்கறிஞரே ஜெயலலிதாவிடம் நேரடியாக வழங்கவும் உத்தரவிட்டனர். மேலும் நீங்கள் பொது வாழ்வில் இருக்கும் ஒருநபர். அதனால் நீங்கள் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தான் வேண்டும். கொள்கை விமர்சனங்கள் அவதூறு பேச்சுக்கள் ஆகாது. தமிழகத்தில் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முடியாது. அவதூறு வழக்கு சட்டம், தமிழகத்தில் தான் அதிக அளவு தவறாக பயன்படுத்தப்படுகிறது என நீதிபதிகள் கண்டனமும் தெரிவித்தனர்.
இதனால் சுப்ரீம் கோர்ட் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகுந்த கோபத்தில் இருப்பதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து முதல்வருக்கு நெருக்கமான பெயரே இல்லாத அடிமை ஒருவர் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: அம்மாவுக்கே அட்வைஸா என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக இருக்கிறது. இந்த மாதிரி உத்திரவு வழங்கிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மீது அவதூறு வழக்கு தொடருவது குறித்து அம்மா அட்டர்னி ஜெனரல் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எப்படியும் சுப்ரீம் கோர்ட்க்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது, அம்மான்னா சும்மாவா என்று கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks