சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று 65வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்து விஜயகாந்துக்கு அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சால்வைகள் அணிவித்தனர். இதைத் தொடர்ந்து, திறந்தவெளியில் கட்சி வளாகத்தில் வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் முன்னிலையில் விஜயகாந்த் கேக் வெட்டினார். அப்போது, விஜயகாந்துக்கு வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் கேக் ஊட்டினர். பதிலுக்கு விஜயகாந்தும் அவர்களுக்கும் கேக் ஊட்டினார்.vijayakanth birthday cake

அப்போது வைகோ தான் கொண்டுவந்திருந்த ஸ்பெஷல் பீனிக்ஸ் பிரியாணியை எடுத்து கேப்டனுக்கு ஊட்டினார். அதைத் தொடர்ந்து கூட்டணிக்கு கட்சியினரும் பிரியாணியை சுவைத்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது: கேப்டனுக்கு பிடித்த பீனிக்ஸ் பிரியாணியை என் கைப்பக்குவத்தில் செய்து, கேப்டனின் பிறந்த நாளுக்காக ஸ்பெஷலாக கொண்டுவந்தேன். தமிழ் நாட்டில் கிடைக்காததால் ராஜஸ்தானில் இருந்து  பீனிக்ஸ் பறவையை தருவித்து, இந்த பிரியாணி செய்தோம் என்று பெருமையுடன் கூறினார். மேலும் கேப்டனுடன் சேர்ந்து மக்கள் நலக்கூட்டியக்கம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும், எப்படியும் கேப்டனை சென்னையின் மேயர் ஆக்குவதே வாழ்க்கையில் எனது ஒரே குறிக்கோள். என்னை மீறி யாரும் கேப்டன் மீது கைவைக்க முடியாது என்று ஆவேசமாக கூறினார்.

இதே சமயத்தில், தமக்கு பிறந்த நாளையொட்டி நினைவுப் பரிசை வழங்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்த தொண்டர் ஒருவரை விஜயகாந்த் சரமாரியாக தாக்குவதை பார்த்த வைகோவும், மற்ற கூட்டணிக்கு கட்சி தலைவர்களும், தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் அங்கிருந்து நைசாக தப்பி ஓடியதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

There are no comments yet