சென்னை: மோசடி வழக்கில், சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இந்தக் குழுமத்துடன் திரைப்படத் தயாரிப்பாளர் மதன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அந்த நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் காசிக்கு சென்று கங்கையில் சமாதி அடையப்போவதாக ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு மே 29-இல் மதன் தலைமறைவாகிவிட்டார். வேந்தர் மூவிஸ் மதன் சமீபத்தில் மாயமானார். இவரை கண்டு பிடித்து தருமாறு சென்னை ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட் மதனுக்கு நெருக்கமான பச்சமுத்துவிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என கேள்வி எழுப்பியது. இதன் படி நேற்று இரவு முதல் பச்சமுத்துவிடம் சென்னை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று ( 26 ம்தேதி ) பச்சமுத்துவை போலீசார் கைது செய்தனர். பின்னர், பச்சமுத்து சைதாப்பேட்டை 11 வது குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில் செப்.,9ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பச்சமுத்துசென்னை புழல் சிறையிலிருந்து நமது கப்ஸா நிருபருக்கு அனுப்பிய ஈமெயில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடன் வாங்கி சென்னை மேற்கு மாம்பலத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி தொடங்கிய நான் இன்று பல மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், தொழில் நுட்ப கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் என் என் சாம்ராஜ்யம் பறந்து விரிந்து ஏரிகளின் மேலும், குளங்களின் மேலும் இருக்கிறது. . மேலும், நைட்டிங்கேல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம்.நர்சிங் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பிசியோதெரபி, எஸ்.ஆர்.எம். ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜ், எஸ்.ஆர்.எம். பாலிடெக்னிக் கல்லூரி, ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பல்மருத்துவ கல்லூரி, எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம், வள்ளியம்மை பொறியியல் கல்லூரி என 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் நான், இந்த வருடம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று புழல் சிறைக்கு சென்று மாணவர் சேர்க்கையை ஆரம்பித்துள்ளேன்.
மேலும் எனது கீழ்க்கண்ட நிறுவனங்களுக்கு ஆள் எடுக்கவும் சிறைச்சாலை உபயோகமாக இருக்கும் என்பதால் நான் இங்கு தற்காலிகமாக வந்துள்ளேன். எனவே என்னைப்பற்றி யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் 600-ஏக்கர் (காட்டாங்குளத்தூர்)
வள்ளியம்மாள் ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரி
வள்ளியம்மாள் பாலிடெக்னிக்
வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரி
எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரி (காட்டாங்குளத்தூர்)
எஸ்.ஆர்.எம்.பல்மருத்துவக்கல்லூரி (காட்டாங்குளத்தூர்)
எஸ்.ஆர்.எம்.பல் மருத்துவக்கல்லூரி ராமாபுரம்
எஸ்.ஆர்.எம்.மேனேஜ்மெண்ட் கல்லூரி ராமாபுரம்
எஸ்.ஆர்.எம்.ஈஸ்வரி என்ஜீனியரிங் கல்லூரி ராமாபுரம்
எஸ்.ஆர்.எம்.ஆர்ட்ஸ்&சயின்ஸ் மேனேஜ்மென்ட் கல்லூரி – வடபழனி
SIMS Hospital – (வடபழனி)
எஸ்.ஆர்.எம்.ஹோட்;டல் (காட்டாங்குளத்தூர்)
எஸ்.ஆர்.எம்.ஹோட்டல் (தூத்துக்குடி )
எஸ்.ஆர்.எம்.ஹோட்டல் (திருச்சி )
எஸ்.ஆர்.எம். 5 நட்சத்திர ஹோட்டல் கிண்டி
எஸ்.ஆர்.எம்.ஹாஸ்பிட்டல் மாம்பலம்
எஸ்.ஆர்.எம். பவர் (கடலூர்) (2000 மெ.வாட் கொண்ட மின் உற்பத்தி நிறுவனம் பணிகள் நடைபெறுகிறது)
எஸ்.ஆர்.எம்.டிராவல்ஸ் (சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு Volvo பேருந்துகள்)
எஸ்.ஆர்.எம்.டிரான்ஸ்போர்ட்ஸ் (Hyundai, Maruthi போன்ற கார்களை சுமந்து செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்)
எஸ்.ஆர்.எம்.பார்சல் சர்வீஸ்
எஸ்.ஆர்.எம்.எலக்ட்ரிக்கல்ஸ் (சி.எப்.எல்.மற்றும் டியூப்லைட்டுகள் தயாரிக்கும் கம்பெனி)
வளசரவாக்கத்தில் பல ஏக்கர் பரப்பளவி;ல் உள்ள ஆடம்பர பங்களா
திருச்சி டி.ஆர்.பி.என்ஜினீயரிங் கல்லூரி
திருச்சி எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரி
டெல்லி நொய்டா எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் (200 ஏக்கர் பரப்பளவு)
இலங்கை கொழும்புவில் கல்லூரி
அசோக் நகரில் உள்ள ஐ.ஜே.கே.கட்சி தலைமை அலுவலகம்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
புதிய தலைமுறை வார இதழ்
புதுயுகம் தொலைக்காட்சி
வேந்தர் தொலைக்காட்சி இவற்றுக்கான சொந்தகட்டிடங்கள்.
எஸ்.ஆர்.எம். Constructions – என்ற பெயரில் நூற்றுக்கணக்கான இடங்களில் கட்டுமானங்கள்
சென்னை தி.நகர் ஜி.என் செட்டி சாலை அடுக்குமாடி கட்டிடம்.
கிண்டி எஸ்.ஆர்.எம்.இன்போடெக்
எனவே எஸ்.ஆர்.எம். குழும நிறுவனங்களில் வேலை தேடி திரளான இளைஞர்கள் கைதியாக புழல் சிறைக்கு செல்ல இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks