சென்னை: அடுத்த மாதம், அருண் விஜய் நடிப்பில் குற்றம் 23 என்ற படம் வெளியாக இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத விஷயம். இதற்கிடையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் நேற்று நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் விஜயகுமாரின் மகனான, நடிகர் அருண் விஜய் இன்று அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது, அருண் விஜய் தனது காரை அதிவேகமாக ஓட்டி வந்த அவர், நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த போலீசாரின் வாகனத்தின் மீது மோதினார். போலீசார் அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், அளவுக்கு அதிகமாக குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது. நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் நடிகர் விஜயகுமார் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் வந்தார். அப்போது விஜயகுமார் அளிக்காத பேட்டி: “எனது மகனை 1995 ஆம் வருடம் ‘முறை மாப்பிள்ளை’ படத்தில் என் பணத்தை போட்டு படம் எடுத்து அறிமுகம் செய்தேன். சில வருடங்கள் ஹீரோவாக குப்பை கொட்டினான், ஒன்றும் வேலைக்கு ஆக வில்லை, பிறகு கவுதம் மேனன் படத்தில் அஜித்துக்கு வில்லானாக நடித்தான், அதுவும் எடுபடவில்லை. எனவே ‘தண்டச்சோறு’ பட்டம் கட்டி வீட்டை விட்டு விரட்டிவிட்டேன். தென்னையை பெத்தா இளனீரு நடிப்பு வராத தண்ட பிள்ளைய பெத்தா கண்ணீரு என்று ஒப்பாரி வைத்தார்.

ஆனால் அருண் விஜய் யை தொடர்பு கொண்டபோது வேறு விதமாக அளித்த ஜிகினா பேட்டி: நானும் போலீசும் முன்பே பேசி வைத்துக் கொண்டு தான் இந்த ‘இடிப்பு’ டிராமாவை அரங்கற்றினோம்.. என் அப்பா சொன்னது மாதிரி என்னால் சிறந்த ஹீரோவாக முடியவில்லை, வில்லனாக ஒரு படம் நடித்தேன், அடுத்த படம் ‘குற்றம் 23’ கிடைக்கவே ரொம்பவே கஷ்டப்பட்டேன்.. ஐஸ்வர்யா ஓட்டி விபத்து ஏற்றியதும் ஆடி கார் தான், நான் ஓட்டி வந்த்ததும் ஆடி கார்தான், அவர் காலி பண்ணியது ஒரு மேன், நான் காலி பண்ணியது ஒரு வேன் அவ்வளவு தான் வித்தியாசம். மற்றபடி குற்றம் 23 படத்திற்கான முதல் பப்ளிசிட்டி குற்றம் இது, இன்னும் 22 குற்றம் பாக்கி இருக்கிறது.. அந்த லிஸ்டில் கற்பழிப்பு, ஆள் கடத்தல், கொலை எல்லாம் உண்டு, சினிமாவில் நன்றாக நடித்து மக்களை மகிழ்விக்க தெரியவில்லை எனக்கு, நிஜ வாழ்க்கையில் மக்களை மகிழ்விப்பத்தே என் நோக்கம், போகப் போக பாருங்களேன்” என்றார்.

கடந்த ஜூலை மாதம் குடித்து விட்டு ஆடிகாரை ஓட்டி வந்த ஐஸ்வர்யா, தொழிலாளி மீது மோதிய விபத்தில் அந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஐஸ்வர்யா, நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் கடந்த வாரம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்பது கூடுதல் செய்தி.

பகிர்

There are no comments yet