சென்னை: கடந்த பத்தாண்டுகளாக காணமல் போன ம.தி.மு.க தலைவர்கள், தொண்டர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உலகின் பல நாடுகளில் பேரினவாத அரசுகளாலும், அடக்குமுறை சர்வாதிகhரத்தாலும் படுகொலைகள் நடைபெற்ற காலங்களில் காணாமல் போனவர்கள் கதி என்ன என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக காணமல் போன ம.தி.மு.க தலைவர்கள், தொண்டர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று யாரவது நினைத்ததுண்டா. அவர்களை திமுகவின் ரகசிய சிறைகளில் சித்திரவதை செய்யப்படுகின்றார்களா? அல்லது அதிமுகவின் அடிமைககளாக மாறி விட்டார்களா என்பதை அறிந்து கொள்ள முடியாமல் நானும் எனது உற்றார் உறவினர்களும்,மனம் வெந்து உடல் நொந்து vaikoகொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் 30 ‘காணாமல் போனோர் நாள்’ ஆனால் எப்போதோ எனது லட்சியகளும், கொள்கைகளும் காணாமல் போய்விட்டன, இதை யார் கேட்பது.

ஆகவே காணாமல் போன ம.தி.மு.க தலைவர்கள், தொண்டர்களை கண்டுபிடிக்கவும், காணாமல் போனவர்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிய வேண்டியது, மனித உரிமைகள் கவுன்சில் ஆணையரின் பொறுப்பு ஆகும். இது குறித்து சர்வதேச நீதி விசாரணை நடைபெறுவதற்கும், காணாமல் போனவர்கள் குறித்துத்தக்க நடவடிக்கை எடுப்பதற்கும் ஏற்ற வகையில் அம்மா ஜெயலலிதா செயல்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்று வைகோ அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

There are no comments yet