சென்னை: நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்று ஒரு ஆண்டு முடிவதற்குள்ளாகவே ரூ 3 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் விஷால், தலைவர் நாசர் ஆகியோர் மீது நடிகரும் பத்திரிகையாளருமான வாராகி என்பவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். முன்பு இருந்த நிர்வாகம் செய்த ஊழலை விட இருமடங்கு இந்த புதிய நிர்வாகம் செய்திருக்கிறது. நட்சத்திர கிரிக்கெட் நடத்த ரூ 13 கோடியை சன் டிவி கொடுத்தது. அதில் இப்போது 7 கோடிதான் இருப்பதாகக் கணக்கு காட்டுகிறார்கள் விஷால் தரப்பினர். 3 கோடி கிரிக்கெட் நடத்த செலவாகிவிட்டதாகக் கூறுகிறார்கள். மீதி 3 கோடிக்குக் கணக்கு இல்லை. கேட்டால் ஸ்டண்ட் நடிகர்களை வைத்து மிரட்டுகிறார்கள் என்றார்.
 
இது குறித்து விஷால் நாசர் இருவரும் இணந்து கூட்டாக நமது கப்ஸா நிருபருக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: 
 
விஷால்: நடிகர் சங்கத்தைப் பிடித்தாயிற்று. அடுத்தது தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றுவேன். அதன் பிறகு அம்மாவை கிளீன் போல்ட் அவுட் ஆக்கிவிட்டு தமிழகத்தை கைப்பற்றுவதே என் திட்டம். அதற்காகத்தான் என் பிறந்த நாளுக்கு அம்மா தொகுதிக்கு போய் நிறைய நலத்திட்ட உதவிகள் செய்ய முடிவு செய்துள்ளேன். என்ன இருந்தாலும் அவங்க ஊழலுக்கு முன் இதெல்லாம் ஜுஜுபி.
 
 நாசர்:  தம்பி விஷால் சொல்வது சரி. நாங்கள் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் சும்மா பொழுது போக்கிற்கு மட்டும் அல்ல பணம் சுருட்டவும் தான். அரசியலில் இறங்கி 300 கோடி 400 கோடி ஊழல் பண்ண நாங்கள் பார்த்த டிரைலர் தான் இந்த 3 கோடி. மெயின் பிக்சர் இனிமேதான்.
 
விஷால்: சினிமாவில் 3 பேர் ஜெயித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் 300 பேர் செத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று அர்த்தம். அது மாதிரி தான் நடிகர் சங்கமும், 3 பேர் சம்பாதிக்க தான் 300 பேர் சந்தா கட்டுவார்கள்.
 
நாசர்: கரெக்ட், என்னென்னவோ வாக்குறுதிகளை அள்ளி வீசி, தினமும் மீடியாவின் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொண்டு, கடைசி நேர வாக்குப்பதிவின்போது நடக்காத ஒரு அடிதடியை நடந்ததாக ‘சீன்’ கிரியேட் செய்து, ஓட்டுக்களைப் பெற்று ஜெயித்தவர் விஷால் தம்பி. அதுக்கெல்லாம் கூலி வசூல் பண்ண வேண்டாமா?
 
விஷால்: சமீபத்தில் நா. முத்துக்குமார் காலமான போது கூட பார்த்தீர்களே, அவர் வீட்டில் 1 கோடி ரூபாய்க்கு பவுன்ஸ் ஆன ‘செக்’ குகள் இருந்தனவே, இது தான் சினிமாக் காரன் புத்தி, “எரியுற வீட்டில் பிடுங்கின வரை லாபம்” எவன் இருந்தா என்ன போனா என்ன?vishal narsar ungal news
 நாசர்: சபாஷ் தம்பி, அரசியலுக்கு சரியான ஆள் நீதான்.
 
விஷால்: இதற்கு முன்பு இருந்த நிர்வாகிகள் சங்கத்தை கடனில் தான் விட்டு விட்டு போனார்கள், நாங்கள் கட்டடமே இல்லாமல் செய்துவிட்டு தான் உட்காருவோம். சங்கத்தை குட்டிச் சுவர் ஆக்காமல் விடமட்டோம்.. நீச்சல் குளம் கட்டுவோம், மேக்கப் அறை கட்டுவோம் என்று சொன்னதெல்லாம் சங்கத்திற்கு அல்ல, சங்கத்திற்கு சங்கு ஊதிவிட்டு எங்கள் வீடுகளில் கட்டிக்கொள்ளத்தான்.
 
நாசர்: எங்களை கண்டித்து துணை நடிகர், நடிகைகள் சிலர்  தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இயங்கி வரும் நடிகர் சங்க அலுவலகம் முன்னால் நேற்று காலை திரண்டு “நடிகர் சங்கமே எங்களுக்கு வேலை கொடு, வேலை கொடு” என்று கத்தினார்கள் நாங்களே, கூத்தாடிகள், வேலைக்கு எங்கே போவது, வேண்டுமானால் வாயில் பாலை ஊற்றி, வாய்க்கரிசி போடுகிறோம்.. ரொம்ப அடம் பண்ணினால், ஸ்டண்ட் நடிகர்களை வைத்து அடித்து விரட்டுவோம். என்று அதிரடி வில்லத்தனதுடன் பேட்டியை முடித்துக் கொண்டனர் இருவரும். 
 
பேட்டியின் போது பாதுகாப்பிற்காக கனல் கண்ணன், ஜாகுவார் தங்கம், சூப்பர் சுப்பராயன், ராம்போ ராஜ்குமார் போன்ற ஸ்டாண்ட் நடிகர்கள் இருந்தனர். எனவே நமது நிருபர் மேற்கொண்டு கேள்வி ஏதும் கேட்காமல் நடையை கட்டினார். 
பகிர்

There are no comments yet