சென்னை: சூப்பி ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான தமிழகத்தின் தன்னிகரில்லா தவப்புதல்வி ஐஸ்வர்யா, ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ணை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றம் பற்றிய விழிப்புணர்வை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு எடுத்து கூற உள்ளார். ஆண் பெண் இருபாலருக்கும் சமமான உலகை 2030–க்குள் உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதற்கு ‘பிளானெட் 50–50’ (அதாவது உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்) என பெயரிடப்பட்டு உள்ளது.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத லதா ரஜினிகாந்துக்கு நெருக்கமான சமூக சேவகர் ஒருவர் கூறி இருப்பதாவது:
பாடகி, இசை அமைப்பாளர், சமூக சேவகர், திரைப்பட இயக்குநர் என கவனச் சிதறல் குறைபாடு கொண்ட ஐஸ்வர்யா தனுஷுக்கு இந்த பொருத்தமில்லாத பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆரம்பத்தில் யாரும் நடிக்க ஒத்துழைப்பு தராததால் சினிமா சண்டை கலைஞர்களின் வாழ்க்கையை குறும்படமாக எடுத்தவர். தனுஷை திருமணம் செய்து, கதநாயகனாக்கி 3 என்ற பெயரில் கமல் பெண்ணான ஸ்ருதியை நடிக்க வைத்து ஒரே ஒரு மொக்கைப் படம் எடுத்தார். ‘மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் ‘3’! – என்று தனுஷ் பேட்டி அளிக்கும் விதத்திற்கு படம் தியேட்டரை விட்டே கொலைவெறியென ஓடியது.
இந்த நிலையில் ரஜினியின் பலூன் காமெடி கிளைமாக்ஸ் நிறைந்த படமான “லிங்கா” என்ற பெயரில் தான் பெற்ற இரண்டாவது குழந்தைக்கு ஜூனியர் ஹார்லிக்ஸ் ஊட்டிக் கொண்டு இருந்த அவரை திடீரென ஐக்கிய நாடுகள் சபை அவரை தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ணை தூதராக நியமித்துள்ளது நாவிற்கினிய செய்தியாக உள்ளது. தென்னிந்திய பெண்களின் அவல நிலையை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு சென்று நாறடிப்பது, அவர்களின் உரிமைக்காக ஐ.நா. சபையில் “டப்பிங்” குரல் கொடுப்பது போன்ற பணிகளை ஐஸ்வர்யா மேற்கொள்வார். இந்த நியமன ஆணை வழங்குவதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் அவரது மன்மத ராசாவான கணவர் நாக்குப் பூச்சி தனுஷ், கல்விக் கொள்ளை ஸ்பெஷலிஸ்ட் லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்திய (நடிகரின்) பெண் ஒருவர் இந்த பதவியை பெறுவது இதுவே முதல் முறை என்பது வருந்தத்தக்கது.
இந்நிலையில் இயகுனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், விஜய் சேதுபதி, அமலா பால், ஆண்ட்ரியா ஆகியோர் வட சென்னை என்ற படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் கற்புக்கரசி அமலா பாலுக்கு வாய்ப்பு வழங்க கூடாது என தனுஷின் மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான தவப்புதல்வி ஐஸ்வர்யா கூறியதாக பேசப்பட்டது. ஆனால் மனைவி ஐஸ்வர்யாவின் பேச்சையும் மீறி மன்மத ராசா தனுஷ் அமலா பாலுக்கு “சின்ன” வாய்ப்பு அளித்தார். இதனால் ஐஸ்வர்யா இந்த பஞ்சாயத்தை அவரது தந்தை “மௌனகுருஜி” ரஜினிகாந்திடம் கொண்டு சென்றதாகவும் பேசப்பட்டது.
சுதந்திர தியாகியாக அவரது தந்தை ரஜினி காந்த் பாடுபட்டதாலும், ஏழைகளுக்காக தன் சொத்தில் பாதி எழுதி வைத்ததாலும், கபாலி உட்பட பல “பப்படங்களில்” ஏழைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததாலும் இவரது மகளுக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டது. தமிழ் நாட்டை நாசமாக்க விரும்பாத அவரது தந்தை ரஜினி சமீபத்தில் கர்நாடகாவில் சர்ச்சைகுரிய இடம் வாங்கி போட்டுள்ளார் என செய்தி வெளியானது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
There are no comments yet
Or use one of these social networks