புது டில்லி/ சென்னை: தமிழக கவர்னராக, கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்த, ரோசய்யா பதவிக் காலம், நேற்று முன்தினம் முடிந்தது. அதை தொடர்ந்து,மஹாராஷ்டிர கவர்னர் வித்யா சாகர் ராவ், தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்’ என, அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்., மூத்த தலைவரும், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ரோசய்யா, 2011ல், தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம், நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று பேசப்பட்டது.

அனால் முதல்வர் ஜெயலலிதா ரோசய்யாவுக்கு புதிய பதவி வழங்க ஜெயா முடிவு செய்துள்ளதால் ப.ஜ.க அரசு ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க ரோசய்யாவை விடுவித்ததாக கூறப்படுகிறது. வரும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு ரோசய்யாவுக்கு அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளார் பதவி வழங்கப்படலாம் என போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பெயர் இல்லாதா ஒரு அடிமை அமைச்சர் கூறியதாவது: ரோசைய்யா கவர்னராக இருந்தபோது அம்மாவின் புகழ்jayalalithaa-swearing-in-ceremony பாடுவதில் எங்களை எல்லாம் மிஞ்சி விட்டார். எங்களை போன்ற அம்மாவின் அடிமைகளுக்கெல்லம் அவர்தான் மிகச் சிறந்த வழிகாட்டி, அவரைப் போன்ற பெரிய மனிதர் கட்சியில் இருப்பதும் ஒரு பெருமைதான். நாஞ்சில் சம்பத் இப்போது கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டு விட்டதால் அந்த இடம் காலியாகத்தான் உள்ளது. அந்த இடத்திற்கு ரோசைய்யாவை விட பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது என்று கூறி அம்மாவின் 100 நாள் ஆட்சி நிறைவு விழாவுக்கு பால் குடம் எடுக்க விரைந்தார்.

There are no comments yet