சென்னை: கிரீமிலேயர்” உச்சவரம்பை 1,76,645 கோடியாக உயர்த்தினால் நானும் என் குடும்பமும் பயன் பெறுவோம் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறிஉள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற, நடைமுறையில் இருந்து வரும் வருமான வரம்பினை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வந்துள்ளது. மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் பெறவேண்டுமானால், பெற்றோரின் ஆண்டு வருமானம் ஆறு இலட்சம் ரூபாய்க்குள் தான் இருக்க வேண்டும் என்று இதுவரை விதிமுறை யில் கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழலில் எங்கள் குடும்பத்தில் ஆண்டு வருமானம் ஆறு இலட்சம் ரூபாய் என்ற வரையறைக்குள் யாரும் வருவதில்லை. இதன் காரணமாக பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் எதனையும் என் குடும்பத்தினர் அடைய முடியவில்லை. எனவே நடைமுறையில் இருந்து வந்த “கிரீமிலேயர்” பிரிவினருக்கான வருமான வரம்பினை உயர்த்தி எங்களைப் போன்ற பிற்படுத்தப்பட்டோர் பயன் அடைவதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டுமென்று தொடர்ந்து குரல் எழுப்பியும் என் தொண்டையில் புண்ணே வந்து விட்டது. நான் காட்டுக் கத்து கத்தினாலும் யார் கேட்கிறார்கள், அப்படியும் அந்த வருமான வரம்பு பல ஆண்டுகளாக உயர்த்தப் படாமலே இருந்து வந்தது. அந்த உச்ச வரம்பினைத் தான் அதாவது ரூ. 6 லட்சம் என்பதிலிருந்து ரூ.10.5 லட்சம் உயர்த்த வேண்டுமென்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்தது.
இந்தப் பின்னணியில் தற்போது ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சம் என்பதை ரூ. 8 லட்சம் என்ற அளவில் உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்ட மிட்டுள்ளதாக செய்தி வந்திருக்கிறது. இது தொடர்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் அசோக் சைனி அவர்கள், வருமான வரம்பினை 15 இலட்சம் ரூபாய் அளவுக்கு உயர்த்த வேண்டுமென்று சிபாரிசு செய்துள்ளதாகக் கூறியிருக்கிறார். எனவே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பா..ஜ.க. அரசு, இந்தியாவில் உள்ள என்னைப் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்னும் நோக்கில், அவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 1,76,645 கோடி அளவுக்கு உயர்த்தி அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வேண்டுகிறேன் எனக்கூறியுள்ளா
There are no comments yet
Or use one of these social networks