சென்னை: சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஷாப்கன்ஜ் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடை பயனாளிகள் பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகைகள் தெரிய வந்துள்ளது. கவர்ச்சிக் கன்னிகள் தீபிகா, ராணி முகர்ஜி மற்றும் சோனாக்ஷி ஆகியோர் மாதந்தோறும் அரிசி, பருப்பு, சீனி மாற்று பாமாயில் வங்கியுள்ளதாக பதிவேடுகள் தெரிவிப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து கருத்து அறிய நமது கப்ஸா நிருபர் நடிகர் சங்கத் தலைவர் விஷாலை தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது: நேற்றிருந்தார் இன்றில்லை, இன்றிருப்பார் நாளையில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அது போலத்தான் சினிமாவில் வாய்ப்பு என்பது தொடர்ந்து கிடைக்காது. ரசிகர்களின் ராணிகளாக வலம் வரும் நடிகைகள் பின்னாளில் சாப்பாட்டுக்கும் சரக்குக்கும் மிகவும் கஷ்டப்படுவர். மார்க்கெட்டும் மார்க்கட்டும் போன பின்பு எங்களை யாரும் மதிப்பதில்லை. சொத்துக்கும், சோத்துக்கும் அல்லாடுகிறோம்.

தனது அக்மார்க் உடற்கட்டை இழந்த பயில்வான் ரங்கனாதன் சமீபத்தில் அரசுbayilvaan அளிக்கும் முதியோர் இலவச பஸ் பாஸ் வாங்கியதை கேள்விப்பட்டதை அடுத்து எனக்கு நான்கு நாட்களுக்கு தூக்கமே வரவில்லை. துணி வாங்க காசில்லாமல் சிவாஜி படத்தில் ஷ்ரேயா கந்தல் துணி கர்சீப் கட்டிக் கொண்டு நடித்தார். சிலர் அரைகுறை ஆடையோடு படங்களில் நடிப்பதற்கு வறுமைதான் காரணம்.

நமது தமிழக முதல்வரும் ஒரு முன்னாள் சினிமா நடிகைதான் எனவே அவருக்குத்தான் தெரியும் எங்களின் துக்கமும், துயரமும். ஷூட்டிங் இல்லாத நாட்களில் பேட்டா இல்லாமல் நாங்கள் படும் வேதனையும் அவர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன். எனவே உத்திரப் பிரதேசத்தை பின்பற்றி தமிழ் நாட்டிலும் அனைத்து நடிக, நடிகையர்க்கு ரேஷன் கார்டு வழங்க முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். அது மட்டுமல்லாமல் தமிழக அரசு சார்பில் வாய்ப்பிழந்த நடிகைகளும், வயது முதிர்ந்த நடிகர்களும் பயன்பெறும் விதாமாக அரசின் பல் வேறு நலத்திட்டங்களை விரைந்து சினிமா கலைஞர்களுக்கு வழங்க வேண்டும். அரிசி பருப்பு மட்டுமன்றி, சாதாரண மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்குவது போல், நடிகைகளுக்கு விலையில்லா நீச்சல் உடை, குட்டைப்பாவாடை மற்றும் குடிப்பழக்கம் உள்ள சினிமா கலைஞர்களுக்கு டாஸ்மாக் சரக்கும் மானிய விலையில் வழங்க ஆவன செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்வது முதல்வரின் கடமை, எங்கள் கோரிக்கைகள் நிறைவேற தெருவில் இறங்கி போராடவும் தயங்க மாட்டோம் என்ற மிரட்டலோடு பேட்டியை முடித்தார்.

பகிர்

There are no comments yet