சென்னை: ரஜினி நடித்து வெளியான, கபாலி படத்தில், அம்பேத்கர் மற்றும் தலித் இன மக்களை முன்னிலைப்படுத்துவது போன்ற காட்சிகளில் நடித்து தன்னை தலித் ரட்சகனாக ரஜினி காட்டிக் கொண்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கபாலி படத்தின் தாக்கம் மக்கள் மனதில் இருக்கும் போதே, அரசியலில் நுழைந்தால் தனக்கு வரவேற்பு இருக்கும் என ரஜினி கூறியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ், நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார். கிட்டதட்ட, நான்கு மணி நேரத்துக்கும் மேல் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, ‘தமிழகத்தின் எதிர்கால நலனை முன்னிட்டு, மக்கள் சக்தியை பின்புலமாகக் கொண்ட நீங்கள், அரசியலுக்கு வருவது அவசியம்; காலத்தின் கட்டாயம்’ என்ற ரீதியில், நிறைய விஷயங்களை பொன்ராஜ், ரஜினியிடம் அழுத்தம் திருத்தமாக கூறினார். இதையடுத்து ரஜினிக்கும், தமிழக அரசியல் களத்தை தன்வயப்படுத்தும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக தான் தலித்தாக மாறிவிட்டால் கபாலி எபெஃக்டில் தலித் மக்களை கவர முடியும் என்பதால், விரைவில் தான் ஒரு தலித் என்று ரஜினி உலகுக்கு அறிவிப்பார் என்று அவரது ரசிகர் மன்ற பொறுப்பாளர் குடி கெடுத்தான் தெரிவித்தார். மேலும் தலித் இன மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாக தனது ரசிகர்கள் அனைவரையும் தலித்தாக மாற வைக்கும் ஐடியாவும் ரஜினிக்கு உள்ளதாகத் தெரிகிறது. இதற்காக தன் ரசிகர் மன்றங்களை தூசு தட்டும் முனைப்பில் களம் இறங்கி உள்ளார். அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள தன் ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கை, மன்றங்களில் பொறுப்பில் உள்ளவர்கள், அவர்கள் பின்புலம், வயது, வேறு ஏதேனும் அரசியல் இயக்கங்களில் உள்ளனரா, தொழில், ஜாதி உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் சேகரிக்க, தன் நண்பர்களுக்கும், ரசிகர் மன்ற பொறுப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். நிர்வாகிகள் இல்லாமல், சரிவர செயல்படாமல் இருக்கும் மன்றங்களை புதுப்பிக்கவும், அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கட்சி ஆரம்பித்தால் தனது முதல் போராட்டமாக இந்தியா முழுவதும் உள்ள மதுக் கடைகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே ரஜினியின் எண்ணம் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விலைகளில் மது விற்கப்படுவதாகவும், இதனால் ஸ்டேட் விட்டு ஸ்டேட் செல்லும் பொது குடிமகன்கள் சிரமப்படுவதாகவும் ரஜினி வருத்தப்பட்டுள்ளார். உதாரணமாக விலை குறைவு என்று சரக்கு வாங்க பாண்டிச்சேரி செல்லும் நிலைமயை மாற்ற வேண்டும். அதற்கு ஒரே வழி இந்திய முழுவதும் உள்ள எல்லா மதுக்கடைகளையும் இணைத்து ஒரே ஸ்டேட் ஒரே ரேட் என்று விலையை சமன்படுத்த வேண்டும் என்றும் ரஜினி அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.
இந்த ஒரே ஸ்டேட் ஒரே ரேட் யோசனையை வலியுறுத்தி, பிரதமர் மோடியை சந்திக்க ரஜினியும் பொன்ராஜும் திட்டமிட்டுள்ளதாகரஜினி மன்ற நிர்வாகி கூறினார். ஏற்கனவே தலித்துகளின் வெறுப்பில் உள்ள பா.ஜக.வும், மோடியும் ரஜினின் இந்த வேடத்திற்கு ஆதரவு தெரிவுத்துள்ளதாகவும் நம்பத்தகாத செய்திகள் கூறுகின்றன. ரஜினியின் இந்த தலித் ரட்சகன் திட்டம் மற்றும் செயல்பாடுகளால் எங்கே தனது வாக்கு வங்கிக்கு வேட்டு வைத்துவிடுவாரோ என்று திருமா கிலியில் உள்ளதாக தெரிகிறது.
There are no comments yet
Or use one of these social networks