சென்னை: தன் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரின் தீவிர முயற்சி மட்டும் பண முதலீட்டினாலும், ரசிகர்களின், பொது மக்களின் பொறுமையினாலும் நடிப்பு என்றல் என்ன என்று தெரியாமலேயே  60 படங்கள் நடித்த குஷியில் இருக்கும் இளைய தலைவலி விஜய் நடிக்கும் 60-வது படம் பைரவா என அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கு பைரவா என சிவன் பெயர் இடப்பட்டிருப்பது குறித்து அஜித் ரசிகர்கள் தமது அதிருப்தியை தெரிவித்து   BUY ரவா செய் உப்புமா என கிண்டலடிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
இந்நிலையில், இன்று பைரவா படத்தின் முழுக்கதையும்  இன்டர்நெட்டில் லீக் ஆனதாக நமது கப்ஸா நிருபருக்கு தகவல் வந்ததை அடுத்து நமது நிருபர் இன்டர்நெட்டை அலசி ஆராய்ந்து நமது வாசகர்களுக்காக பிரத்யேகமாக கதையை கண்டிபிடித்தார். அந்த கதை இங்கே உங்களுக்காக: 
 
அம்மா சென்டிமென்டில் கதை ஆரம்பிக்கிறது. அம்மாவுக்கு வீட்டில் ஹெல்ப் செய்ய வேண்டும் என்று இளைஞர்களுக்கு எடுத்துக் காட்டும் நோக்கத்துடன், ஹீரோ விஜய் ஓபனிங் காட்சியில், தன் அம்மா சொன்னதுக்காக தனது சைக்கிள் ரிக்‌ஷாவில் கார், பஸ், டிரெய்ன், ஏரோ பிளைன் எல்லாத்தையும் விட வேகமாக ஓட்டிக் கிட்டு பக்கத்து தெருவுல இருக்குற ரேஷன் கடைக்கு ரவா வாங்க போகிறார். ரேஷன் கடையில ஜனங்க வெயில்ல ரவாவுக்காக காத்து நிக்கிறது பார்த்து ஃபீல் பண்றாரு. ரேஷன் கடையில ரவா காலியாகிடுச்சுனு சொல்ல, ஒரு பாட்டி ஏன்னு கேள்வி கேக்குறாங்க, பாட்டியை ‘ஏய் கிழவி சும்மா இருக்க மாட்டே என்று ரேஷன் கடை  ஊழியர்கள் கீழ புடிச்சு தள்ள, பாட்டிஈஈஈஈஈஈ…  ஈ என ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் ஒரு ஈயை பார்த்து அலறுவதை கேட்டு விஜய் பொங்கி எழுந்து ரேஷன் கடை ஊழியர்களை அடிச்சு துவைக்க அங்க அரிசி மூட்டை சக்கரை மூட்டையெல்லாம் பறக்க ஒரு செம்ம ஃபைட்.bairavaa003
 
சண்டையோட முடிவுல இதுக்கு நாங்க காரணமில்ல ஏரியா கவுன்சிலர் பையனுக்கு கல்யாணம் எல்லா ரவையும் அங்கதான் போயிடுச்சுனு ரேஷன் கடைக்காரர் சொல்லும் நேரத்தில், ரேஷன் கடையில க்யூவில வெயில சோர்ந்து நொந்து இருந்த தாத்தா, பாட்டிங்கல்லாம், சந்தோஷத்துல விஜய்ய தூக்கி கொண்டாடுறாங்க… ஓபனிங் சாங் ஸ்டார்ட். வாங்க வந்தேன் ரவா.. நான் தான் பைரவா என்ற பாடலுக்கு நடனமாடும் வேளையில் கீர்த்தி சுரேஷிற்கும் விஜய்க்கும் காதல் ஏற்படுகிறது. சதிஷின் மொக்கை காமெடிகள், கீர்த்தியை பார்த்து அசடு வழியும் விஜய்,  நடுவில் டூயட் என படம் போய்க் கொண்டிருக்கிறது. 
 
அடுத்த முறை ரேஷனில் ரவாவை ஆட்டைய போட கவுன்சிலர் குரூப் வருவது விஜய்க்கு தெரிய வருகிறது. அங்க போய் அவர்களை பந்தாட கவுன்சிலருக்கும் விஜய்க்கும் மோதல். இண்டெர்வெல்லுக்கு அடுத்து விஜய் நானே கவுன்சிலர் ஆகி மொத்த ரவா விநியோகத்தையும் தன் கையில் எடுத்துக் கொள்கிறார். தனது ரவா மற்ற ரவாவை விட உயர்ந்த ரகம் என்று BUY ரவா  BUY ரவா என்று தெருத் தெருவாக கூவி விற்று ஒரு சமூக சிந்தனை பாட்டுப் பாடி  கீர்த்தி சுரேஷுடன் குத்தாட்டம் போடுகிறார். 
 
இதுதான் பைரவா படத்தின் பாதி கதை. மொத்த கதையும் சொல்லிவிட்டால், இயக்குனர் மீண்டும் பர்மா பஜார் சென்று பழைய பட சிடிக்களை தேட வேண்டும் என்பதாலும், கேட்கும் மக்கள் ரத்தம் கக்கி இறந்து விடுவார்கள் என்ற உயர்ந்த நோக்கத்துடனும் நமது நிருபர் மீதிக் கதையை கூறவில்லை. 
 
இந்தக் கதை குறித்து கருத்துக் கேட்க விஜய்யை சந்தித்த போது “என்னது பைரவா படத்துல கதை இருந்துச்சா? நான் அப்படி ஏதும் கதை யோசிக்கலையே என அதிர்ச்சியில் உறைந்தார்.மேலும் நீங்க சொன்ன  இந்த கதை கூட ரெம்ப நல்லாத்தான் இருக்கு, இதையே வெச்சி அடுத்த பட   ஷூட்டிங் ஆரம்பித்து விடலாமே என்று அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரை பார்க்க விரைந்தார்,  
பகிர்

There are no comments yet