தருமபுரி: பிரபலமான “யெஸ்’ வங்கி என்ற தனியார் வங்கி பெயருடன் “ஏபிஎஸ்’ என்ற எழுத்துக்களை நடுவில் சேர்த்துக் கொண்டு, “யெஸ் ஏபிஎஸ் வங்கி’ என்ற பெயரில் போலியாக வங்கி நடத்திவந்த நான்கு பேரை காவல் துறை கைது செய்தது. .
இதுகுறித்து மாட்டிக் கொண்ட ‘அந்த’ நாலு பேர் கூட்டாக நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டி: ஒரு மாசத்துக்கு முன்னாடி கலைஞர் டிவி யில் வடிவேலு நடித்த “வின்னர்” திரைப்படம் பார்த்துக் கொண்டு இருந்தோம்.. அதில் ஒரு வசனம் வரும்..”ஏண்டா இப்படி வெட்டியா ஊரைச்சுத்துறீங்க என்று வடிவேலைக் கேட்பார்கள், ஒரு பேங்க் கட்டி விடுங்க நடத்துறோம்..” என்று வடிவேலு நக்கலாக சொல்வார்.. அப்போது எங்களுக்கு உதித்த ஐடியா தான் பேங்க் திறப்பது.. இந்தியாவில் பெயர் போன பணக்காரர்களான அம்பானி, மல்லையா மாதிரி ஆவதற்கு இது தான் சிறந்த வழி என்று நினைத்தோம். சமீபத்தில் கைதாகி ஜெயிலில் களி தின்று கொண்டிருக்கும் கல்விக் கொள்ளை வேந்தர் பச்சமுத்துவும் எங்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். கொள்ளை, வழிப்பறி, திருட்டு பண்ணினாலும் அதை பணமாக மாற்றுவதில் சிக்கல் ஏற்படும். மற்றினாலும் அதை பேங்கில் தான் போட வேண்டும். என்னத்துக்கு இன்னொருத்தன் பேங்கில் பணத்தை போட வேண்டும், ஸ்டாலின் சொன்னபடி ‘நமக்கு நாமே’ திட்டப்படி இந்த முதல் கிளையைத் திறந்தோம். பிசினஸ் சூடு பிடிப்பதற்குள் போலீஸ் எங்களை பிடித்து விட்டார்கள்.
பணம் இருந்தால் தான் இந்தியாவில் மதிப்பு. பணம் சம்பாதிக்க வேலை வாய்ப்பு தேடுவது ஒருவகை, வாய்ப்பை உருவக்குவது ஒரு வகை, சம்பாதித்து பேங்கில் போடுவதை விட, பேங்க் திறந்து சம்பாதிப்பது சுலபம் என்று நினைத்தோம், நியூமரானஜிஸ்டை கலந்தாலோசிக்காமல் பெயர் வைத்ததால் சிக்கிக் கொண்டாம். நம் நாட்டு பிரதமர் மோடியே அம்பானி குடும்பத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி ஜியோ வியாதியுடன் பித்து பிடித்து இருக்கிறார். சொத்து பிடுங்கப்பட்டு நாடு கடத்தப்பட வேண்டிய விஜய் மல்லையா மோடி உதவியுடன் வெளிநட்டில் சொகுசாக ராஜ வாழ்க்கை வாழ்கிறார். கல்விக் கொள்ளை வேந்தர் பச்சமுத்துவும் சில நாட்களில் வெளியில் வந்து இன்னும் பல கல்லூரிகளும் “பள்ளி-அறை” களும் கட்டி பிசினசை பெருக்கத்தான் போகிறார். ஏன் நம்ம மரம் வெட்டி ராமாதாஸ் ஐயா கூட தேர்தல் சமயத்தில் பச்ச முத்துவிடம் கையேந்தி நிற்க வில்லையா.. எங்களை கைது செய்வதை தவிர்த்து மேலும் கடன் தந்தால் பேங்க் பிசினசை பெருக்குவோம், இந்தியாவின் உலக வங்கிக் கடனை அடைக்க பாடுபடுவோம் என்று ஆதங்கப்பட்டனர்.
There are no comments yet
Or use one of these social networks