சென்னை: தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில், உள்ளாட்சி தேர்தல் குறித்த, இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில், நேற்று துவங்கியது; கூட்டத்திற்கு, மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி தலைமை வகித்தார். அதில் பங்கேற்ற பின், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலர் நக்மா நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டி: ‘காவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவு அளித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு நடப்பதால், உங்கள் நிலைப்பாடு என்ன?’ என்ற கேள்விக்கு பதிலளித்த நக்மா: ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் நடிகர் பிரசாந்துடன் கதாநாயகியாக தோன்றியவர் நடிகை காவேரி, எனக்கு நன்கு அறிமுகமானவர், நண்பரும் கூட. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், தற்போது சின்னத்திரையில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மெகா சீரியல் தொடர்களில் நன்கு நடித்து பெயர் போனவர். சமீபத்தில் கூட இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர் மேலும் பல திருமணங்கள் செய்ய எனது வாழ்த்துக்கள்.nagma

காவேரி இங்குதான் சென்னையில் எங்கோ இருக்கிறார். பணம் கொடுத்தால் நடிக்க கால்ஷீட் கொடுப்பார். அவருக்காக ஏன் இவ்வளவு போராட்டம் என்று எனக்கு புரியவில்லை என்றார். உடனே அருகில் இருந்த மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், நக்மாவின் காதில் கிசுகிசுத்தனர், உடனே ஆவேசம் அடைந்த நக்மா, ”தமிழகத்தில் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன; அதையெல்லாம் விட்டு விட்டு, காவேரி பிரச்னையை கேட்கிறீர்களே? உள்ளாட்சி தேர்தலில் மகளிர் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கவே வந்தேன்; காவிரி பிரச்னை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன்,” என்றார்

There are no comments yet