சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா திறந்துவிட்டுள்ள தண்ணீர் போதாது என்று தமிழக அரசு சார்பில், காவிரி கண்காணிப்பு குழுவிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. காவிரியிலிருந்து இந்த மாதம், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 50 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிடக் கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு 10 நாட்களுக்குள் சுமார் 13 டிஎம்சி என கணக்கிட்டு தண்ணீர் திறக்க கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்நிலையில் இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா “காவிரி நீர் பிரச்னையில், இரு மாநில அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கால சூழ்நிலை, கடந்து விட்டது. கர்நாடகாவில், குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழ்நிலை. உச்சநீதிமன்றம், நிபுணர் குழுவை அமைத்து, இரு மாநிலங்களுக்கும் அனுப்பி, தண்ணீர் தேவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்,” என்று தெரிவித்தார்amma-water-bottles

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றம் தற்போது அளித்துள்ள உத்தரவின்படி 13 டி.எம்.சி. தண்ணீர் தான் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்றும், தமிழகத்திற்கு 200 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த ஒரு சில மணி நேரத்தில் அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவித்திருக்கிறார். எனவே அவர் கருத்தை மதித்து கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு நிலைமையை சமாளிக்க அம்மா குடிநீர் பாட்டில்கள் அனுப்பி வைக்க ஜெயலலிதா முன்வர வேண்டும். தன்னுடைய தேவைகளையே எண்ணியிராமல், மற்றவரின் துன்பத்திலும் பங்கெடுக்கும் மனம் வேண்டும். ஆனால் ஜெயலலிதா இதுவரை எதுவும் செய்யாமல் இருப்பது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என்றும் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

There are no comments yet