சென்னை: காவிரியில் இருந்து பாசனத்திற்கு, 50 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடக்கோரி, உச்ச நீதிமன்றத் தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. ‘தமிழகத்திற்கு வினாடிக்கு, 15 ஆயிரம் கனஅடி வீதம், 10 நாட்களுக்குள் தண்ணீர் திறக்க வேண்டும்’ என, செப்., 5ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, செப்., 6ல், கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளிலிருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு கர்நாடகாவில் நேற்று, ‘பந்த்’ நடத்தியது. இதில், கன்னட திரையுலகின் முன்னணி நடிகர், நடிகை யரும் திரண்டனர். இது, தமிழ் திரை உலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.Vishal

கன்னட நடிகர், நடிகையரின் போராட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், கர்நாடக அரசைக் கண்டித்தும், உண்ணாவிரத போராட் டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக நடிகர்கள் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்காக இன்று சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் அவரசமாக கூடுகிறது. நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். இந்நிலையில் பொதுச் செயலர் விஷால் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியதாவது: என்னை போன்ற நடிக, நடிகைகள் கலையை வளர்க்க ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்து காசுக்காக நடிக்கிறோம். தமிழ் நாட்டிலே கால்ஷீட் இல்லேன்னா, பாம்பே, அங்கே வாய்ப்பு இல்லேன்னா ஆந்திரா, கர்நாடகா என்று எங்கே பணம் தருகிறார்களோ அங்கு போய் நடித்துக் கொடுத்துவிட்டு கலையையும், எங்கள் வீட்டு உலையையும் கவனிப்போம். எங்களுக்கு இனம், மொழியெல்லாம் கிடையாது. எங்களுக்கு காவிரியும் கொலைவெறியும் ஒன்றுதான். எங்கே காவிரி ஒடுது, கங்கை ஓடுதுன்னு தெரியாது. எங்க வீட்ல மினரல் வாட்டர்தான் உபயோகிக்கிறோம், காவிரி தண்ணியல்ல. எங்களை உண்ணாவிரதம் இரு, போராட்டம் பண்ணுன்னு சொல்றவங்களுக்கு, எங்களோட ஒரு நாள் கால்ஷீட் எவ்வளவுன்னு தெரியுமா, எவ்வளவு பணத்தை போட்டு புரடுசர்லாம் எங்கள புக் பண்ணியிருக்காங்க என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று படபடத்தார்

There are no comments yet