சென்னை:காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக நடிகர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக, நடிகர் ரஜினி குரல் கொடுக்க வேண்டும்; உண்ணாவிரதம் இருக்க வேண்டும் எனவும், ரசிகர்கள், கோரி வருகின்றனர். கர்நாடகாவில் கண்டக்டராக இருந்த ரஜினியை தமிழக மக்கள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்த்தியுள்ளனர் என்பது விவசாயிகளின் கருத்தாகும். இதுகுறித்து அவரிடம் பேட்டி எடுக்கலாம் என்று பார்த்தால், வழக்கம் போல் தப்பித்து விட்டார், மருமகன் தனுஷ் தான் வசமாக சிக்கியுள்ளார். அவருடன் நமது கப்ஸா நிருபர் நடத்தும் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி உங்களுக்காக.

நிருபர்: அமலா பால் விஜய் பிரிவுக்கு நீங்க தான் காரணம்னு சொல்றாங்களே உங்களோட கருத்து.

தனுஷ்: அமலாபால் நல்ல பொண்ணு சார்.. விஜய் தான் சார் ரொம்ப மோசம், சங்கீதாவுக்கு துரோகம் செஞ்சுட்டு அமலா பால தலைவா படத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.

நிருபர்: நான் இளையதளபதிய கேக்கல.. இயக்குநர் விஜய்.

தனுஷ்: அவரு.. தமன்னா கூட தேவி படம் பண்றதுல பிசி ஆயிட்டதால அசதிக்கு நம்ம கூட வடசென்னை படம் நடிக்கிறாங்க. இதுக்கு மேல.. நான் வாய் விட்ட வீட்ல எனக்கு சோறு கிடைக்காது..

நிருபர்: காவிரி பிரச்னைய பத்தி பேசமாட்டேன்னு. ஸ்டேட்மெண்ட் விட்டுருக்கீங்களே.. ஏன்?

தனுஷ்: சார்.. காவிரி பிரச்னைய பத்தி நான் ஏன் பேசல. காவிரி எங்களுக்கு ரொம்ப முக்கியம் சார்.. இதனால கர்நாடககாரன்க எவ்ளோ பாதிக்கிறாங்க.. கர்நாடகாவுக்கு ஆதரவா நான் குரல் கொடுத்தேனே.. ஏன்னா அதுதான் என் மாமனார் வீடு. அப்ப நான் கர்நாடகாவோட மருமகன். இங்க சம்பாதிக்கிற சொத்தெல்லாம் அங்கதானே சேத்து வச்சிருக்காரு.. அவருக்கு பிறகு எல்லாம் நான் தானே கட்டி காப்பாத்தணும்..

நிருபர்: கர்நாடகாவுல தமிழ் இளைஞர் சம்பத் குமார பேஸ்புக் ஸ்டேடஸ்காக கன்னட இளைஞர்கள் அடிச்சத பத்தி உங்க கருத்து..

தனுஷ்: லூசு பையன் சார்.. சம்பத்.. எவனாச்சும் கர்நாடகாவுல இருந்துகிட்டே எங்களுக்கு எதிரா கருத்து சொல்லலாமா.. இங்க தமிழ்நாட்டுல உக்காந்துகிட்டு பேஸ்புக் போராளிங்க மாதிரி ஸ்டேடஸ் போட்டுருக்கலாம்.. இல்ல சீமான் மாதிரி எங்கள அடிக்காதீங்க… நாங்க ஒன்னும் அடிக்க தெரியாம இல்ல.
அடிக்காதீங்கய்யா. வலிக்குதுனு. கைப்புள்ள வடிவேலு மாதிரி சொல்லிட்டு திரிஞ்சா எவன் வந்து அடிப்பான்னு கேக்குறேன்..

நிருபர்: அப்ப.. தமிழ் மக்கள் பிரச்னையை கண்டுக்க மாட்டீங்க.

தனுஷ்: சார்.. அது எப்டி சார் கண்டுக்காம விடுறது.. எங்க கபாலி-2 படத்தோட கதையே இதவச்சித் தானே. படத்துல தலைவர்.. எப்படி போராடி.. காவிரியை மீட்டு, விவசாயிகளை காப்பாத்துறாருன்னு.. 2000 ரூபா டிக்கெட் வாங்கிட்டு வந்து பாருங்க.. சார்.

There are no comments yet