புதுடெல்லி: பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார் விஜய் மல்லையா என்பது அனைவரும் அறிந்ததே. பல்லாயிரம் கோடி வங்கி கடன்கள் தொடர்பான வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. அவரது பாஸ்போர்ட்டை கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி மத்திய அரசு முடக்கியது. மல்லையா மீதான வெளிநாட்டு பண பரிமாற்றம் மோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இது தொடர்பான வழக்கின் போது மல்லையா அனுப்பிய மின்னஞ்சல் நகலை அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில் இந்தியா வர தமக்கு விருப்பம் உள்ளதாகவும், எந்த விளக்கமும் கேட்காமல் தமது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால் நாடு திரும்ப முடியாது எனவும் விளக்கம் அளித்துள்ளார். இந்தியா வர தமக்கு சிறிது அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மல்லையா கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கடிதத்தை வழக்கில் இணைத்து கொண்ட நீதிபதி அக்டோபர் 4-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். பல்வேறு வழக்குகளில் ஆஜராகாததால் இந்தியாவில் அவருக்கு இருக்கும் சொத்துக்களை அமலாக்கப்பிரிவினர் படிப்படியாக பறிமுதல் செய்தது.

vijay_mallya_இது குறித்து ஸ்கைப் காலில் எமது கப்சா நிருபருக்கு மல்லையா அளித்த பேட்டி: “கிங் பிஷர் நிறுவன விமானங்கள் மூலம் நாள் தோறும் நூற்றுக்கண்க்கான பாஸ்போர்ட்டுகளை பார்க்கும் என்னுடைய பாஸ்போர்ட்டையே இந்திய அரசு முடிக்கியுள்ளது.. அதைப்பற்றி நான் வருந்தவில்லை. என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தும் ஜோடிக்கப் பட்டவை, ஆதாரமற்றவை. ஏற்கனவே நான் வெளிநாடு தப்பிச்சென்ற போது “நான் பயந்து ஓட வில்லை நான் ஒரு சர்வதேச பிசினஸ்மேன்” என்று கூறி சமாளித்தேன். லண்டனில் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது அந்நாட்டு இந்திய தூதரையே பயந்து ஓடச் செய்தேன். எனது சொத்துக்கள் பாஸ்போர்ட் முடக்கப் பட்டாலும், கள்ளத்தோணி ஏறியாவது இந்தியா வந்து வழக்குகளை எதிர்கொள்வேன்.. அதற்காக என் மிச்ச மீதி சில்லறை பணத்தை பொறுக்கி எடுத்து புதிய நவீன ரக திருட்டு இஞ்சின் பொருத்திய தோணி செய்ய ஆர்டர் கொடுத்துள்ளேன்.vijay-mallya

ரத்து செய்யப்பட்ட எனது ரேஷன் அட்டையை திரும்பப் பெற விண்ணப்பித்து அதில் வழங்கப்படும் பாமாயில் கோதுமை சர்க்கரை கொண்டு கால் வயிற்று கஞ்சி குடித்தாவது காலத்தை கடத்துவேன். எனது கிங்க்பிஷர் காலண்டரில் நடித்த மாடல்களுக்கு உடை வாங்க காசு இல்லாமல் பிகினி அணிய வைத்து படம் எடுத்தது வேதனை அளிக்கிறது, பொங்கலுக்கு வழங்கும் இலவச வேட்டி சேலை வாங்கி அவர்களுக்கு கொடுப்பேன். இந்தியாவில் பிரபலமாகி வரும் விளம்பர மாடல் மோடிஜி(யோ) அவர்களை வைத்து விளம்பரம் செய்து முடங்கிப் போன என் விமான சர்வீஸ் மற்றும் இதர தொழில்களை விருத்தி அடைய செய்வேன். மீதமிருக்கும் சில ஆயிரம் சொத்துகளையாவது காப்பாற்றிக் கொள்ள கள்ளத்தோணி ஏறி வருவது தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று பொய்யாக வேதனைப் படுவது போல் நடித்து காட்டினார்.

There are no comments yet