சென்னை: கர்நாடகத்தில் தமிழக இளைஞர் மீது விழுந்த ஒவ்வொரு அடியும், தேசிய ஒருமைப்பாட்டிற்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. நெருப்போடு விளையாட வேண்டாம் என்று கர்நாடக முதல்வரை நான் எச்சரிக்க விரும்புகிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இன்று அவர் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 15ஆயிரம் கனஅடி நீர் அளிக்காhமல் கண்துடைப்பிற்காக தற்போது அணையை திறந்து விட்டுள்ளனர். கர்நாடகாவில் மாநிலம் தழுவிய பந்திற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது என்ற போர்வையில்; கர்நாடகா மாநில அரசே மறைமுகமாக பந்தை நடத்தியது. இதில் தமிழக முதல்வரரின் உருவபொம்மையை எரித்து பாடை கட்டி போராட்டம் நடத்தியது கண்டனத்திற்கு உரியது.
கேரளம் ஒருபக்கத்தில் வஞ்சிக்கிறது. கர்நாடகம் மறு பக்கத்தில் வஞ்சிக்கிறது. ஆந்திரம் வஞ்சிக்கிறது. சிங்கள அரசு மீனவர்களை வஞ்சிக்கிறது. தமிழக முதல்வர் முல்லை பெரியார் பிரச்னையிலும் காவிரி பிரச்னையிலும் முறையாக உச்சநீதிமன்றத்தை அணுகி முறையான நடவடிக்கை எடுத்தார் என்பது யாரும் மறுக்க முடியாது. ஆனால் இன்றைக்கு உள்ள நிலையில் கர்நாடகம் ஒட்டுமொத்தமாக ஓரணியில் உள்ளது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி விட்டார்கள். ஆனால் தமிழகம் பிளவுபட்டுள்ளது.
தொடர்ந்து கர்நாடகம் முறைதவறி நடக்கிறது. தமிழகம் பொறுமையாக உள்ளது. பொறுமைக்கும் எல்லை உள்ளது. தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவு செய்த தமிழ்; இளைஞர் ஒருவர் கர்நாடகாவில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் கண்டனத்திற்கு உரியது. கர்நாடகா முதல்வர் நெருப்போடு விளையாடுகிறார். அங்குள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது என் கடமை. எனவே அன்றொரு நாளில் நான் இலங்கைக்கு கள்ளத் தோணியில் சென்று எவ்வாறு இலங்கை தமிழர்களை காப்பாற்றினேன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதே போல் நாளை பெங்களூர் நடைப்பயணம் சென்று கர்நாடக தமிழர்களை காப்பாற்றி இங்கு அழைத்து வருவேன் என்று கூறினார்.
கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட கேப்டன் விஜயகாந்தும் வைகோவுடன் பயணம் செய்ய இருப்பதாக நம்பத்தகாத செய்திகள் கூறுகின்றன.
There are no comments yet
Or use one of these social networks