சென்னை: தமிழக சட்டசபையில் வெளிநடப்பு செய்து களைத்துப் போன எதிர் கட்சித் தலைவர் ஸ்டாலின் . பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் ஓய்விற்காக தனது குடும்பத்தினருடன் லண்டன் சென்றிருந்தார். அவர் இன்று சென்னை திரும்பி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:

காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும். கர்நாடகாவில் தமிழர்கள் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். காவிரி பிரச்னைக்கு சுமூக தீர்வு காண அ.தி.மு.க., அரசு தவறி விட்டது. காவிரி நீர் பிரச்சனைக்காக கர்நாடகா மாநிலத்தில் நடந்து வரும் போராட்டத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருவது கவலையளிக்கிறது. இது மாதிரியான பிரச்சனை வரும் என்று அறிந்து ஏற்கனவே தலைவர் கலைஞர் சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியதன் அடிப்படையில் இரு மாநில முதல்வர்களும் கலந்து பேச வேண்டும் என்று கூறி இருந்தார் அதன்படி மத்திய அரசு தலையிட்டு இரு மாநில முதல்வர்களையும் அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும். கர்நாடகாவில் வன்முறை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ராணுவத்தை அனுப்பி தமிழகத்திற்குரிய தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார்.

ø;

அப்போது இடைமறித்த நமது கப்சா நிருபர் தனது கிடுக்கிப்பிடி கேள்விகளை தொடுக்க, சற்றும் சளைக்காமல் ஸ்டாலின் கூறிய பதில்கள்:

நிருபர்: சரியாக கலவரம் நடக்கும் போது நீங்க ஊரில் இல்லையே..

ஸ்டாலின்: போட்டி சட்டசபை நடத்தியாதால் எந்த நேரமும் கைதாகலாம் என்ற நிலைமை இருந்தது, அதான் பயந்து லண்டன் ஒடிட்டேன்…

நிருபர்: எப்ப எதாவது அசம்பாவிதம் நடந்தாலும் அது முடியும் வரை ‘கம்’ முன்னு இருக்கீங்க, வேலை முடிஞ்சதுக்கு அப்புறம் அறிக்கை விடுறீங்க…ஏன்…

ஸ்டாலின்: நாங்க (திமுக) எப்பவுமே அப்படித்தான். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது கூட நீங்கள் பார்த்தீர்களே, போர் முடியும் வரை வாய்க்கு பூட்டு போட்டிருந்த தமிழ் ஈன தலைவர் கலைஞர், ரெண்டு நாள் கழித்துத்தான் அறிக்கை விட்டார்… அவர் வழியை தான் நானும் ஃபாலோ செய்கிறேன்.

நிருபர்: அது சரி, எதுக்கு லண்டண் போனீங்க, வேறு ஏதாவது நட்டுக்கு போயிருக்கலாமே?

ஸ்டாலின்: காரணம் இல்லாமலா? லண்டன் காரங்க தான் இந்தியாவை 300 ஆண்டுகள் அடிமைப்படுத்தி வைத்திருந்தாங்க, அது எப்படி சாத்தியாமாயிற்று என்று எலசபத் ராணியுடன் ட்ரைனிங் எடுக்கத்தான் போனேன். ஏற்கனவே தமிழ் தமிழ் என்று சொல்லி ஹிந்தி கத்துக்க விடாமல் நம்ம ஊருக்குள்ளயே தமிழர்களை குண்டுச்சட்டியில குதிரை ஓட்ட வைத்து விட்டோம்.. இப்ப கூகிள் வாட்சப்புன்னு வந்திடுச்சி, அம்மா வேற மொபைல் தரப்போறாங்க, நமது உடன்பிறப்புகளை தக்க வைக்க கூடுதல் ட்ரைனிங்க் தேவைபட்டுச்சி..

நிருபர்: லண்டனில் யாரை பர்க்க போனீங்க?stalin-london

ஸ்டாலின்: எலிசபெத் ராணியை பார்க்கத்தான். ஒரு பெண்ணோட மனசு இன்னோரு பெண்ணுக்கு தான் தெரியும்… நம்ம ஜெ அம்மாவோட மனசு அந்த எலிசெத்த அம்மாவுக்கு தெரியுதானு பேசி பார்த்தேன்… ஒண்ணும் புண்ணியப்படலை..

நிருபர்:: நீங்க விஜய் மல்லையாவை ரகசியமா சந்திச்சதா பேசிக்கிறாங்களே?

ஸ்டாலின்: தெரிஞ்சிடிச்சா…13000 கோடி கொள்ளையடிச்சிட்டு கூலா சுத்திகிட்டு இருக்காரு, அது எப்படி சாதியமாச்சுன்னு எனக்கு ஒரே ஆச்சரியம். 2-ஜி பிரச்சனைக்கே நாங்க ஆடிப் போயிட்டோம், அவரு மன தைரியத்தை பாராட்டிட்டு டிப்ஸ் வாங்கிட்டு வந்தேன்… அதோட அவரு ‘தண்ணி’ (கிங்பிஷர் பீர்) வியாபாரத்துல கில்லாடி, அதான் காவிரி தண்ணீர் பிரச்சனை குறித்து விவாத்து விட்டு வந்தேன்.

நிருபர்: அடுத்ததா பிளான் என்ன வச்சிருக்கீங்க?

ஸ்டாலின்: ஏற்கனவே ஏர்டெல் பிளான் வச்சிருந்தேன், இப்ப நம்ம மோடி இலவசமா ஜியோ பிளான் தரார்ல் அதை வாங்கப்போறேன்…

நிருபர்: அடக் கருமமே, (உள்ளாட்சி தேர்தல்) குறித்து என்ன ஐடியா வச்சிருக்கீங்க..

ஸ்டாலின்:: ஐடியா சிம் இல்லைங்க, ஜியோ சிம் வாங்கப் போறேன்..

There are no comments yet