சென்னை: கர்நாடகா கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழக பா.ஜ., சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, தமிழ் இம்சை சவுந்தரராஜன் நமது கப்ஸா நிருபருக்கு  அளித்த பேட்டி: கர்நாடகாவில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும்; வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே, இங்கே போராட்டம் நடத்தப்பட்டது. கர்நாடகா கலவரத்திற்கு, அங்குள்ள அரசியல்வாதிகளின் சூழ்ச்சி தான் காரணம். அங்கு தமிழர்களோடு, கன்னட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.rajini

கர்நாடகத்தை சேர்ந்த ரஜினி, தமிழகத்தில் ‘நடித்து’ மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இங்கு செல்வாக்கு உள்ளது அங்கு சொல்வாக்கு உள்ளது. மற்றவர்களை விட கர்நாடக மக்களைப்பற்றி ரஜினிக்குதான் நன்கு தெரியும், அது அவரது தாய் மண் அல்லவா.

எங்கள் தலைவர் மோடிக்கு உலகம் சுற்றவே நேரமில்லை, அவரை இங்கு யாரும் மதிப்பதும் இல்லை. எனவே மோடி சொல்வதை விட ரஜினி சொன்னால்தான் கன்னடிகர்கள் கேட்பார்கள். இனிமேல் ரஜினி வாய்ஸ் தமிழ் நாட்டில் எடுபடாதுன்னு எல்லோருக்கும் தெரியும், அதனால அவர் அட் லீஸ்ட் கர்நாடகாவுல வாய்ஸ் கொடுத்தால் நல்லாருக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

There are no comments yet