சென்னை : காவிரி நீர் திறப்பு பிரச்னை தொடர்பாக கர்நாடகாவில் தமிழகர்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறையை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி சார்பில் காவிரி உரிமை மீட்பு பேரணி நேற்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்தது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்டோர் கர்நாடக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பேரணி புதுப்பேட்டை லேங்ஸ் கார்டன் அருகே வரும் போது பேரணியின் பின்புறம் வந்த வாலிபர் விக்னேஷ் திடீரென கர்நாடக அரசை கண்டித்தபடி உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.அருகில் இருந்தவர்கள் வாலிபர் மீது பற்றிய தீயை அணைக்க முயன்றனர். உடனே போலீசார் வாலிபரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அந்த வாலிபர் உடல் முழுவதும் 93 சதவீதம் தீக்காயங்கள் இருந்ததால் மருத்துவர்களின் ஆலோசனைபடி மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டி:
நிருபர்: தேர்தல்ல பல்பு வாங்கினதுக்கு பிறகு ரெம்ப அமைதியாக இருந்தீங்க, திடீர்னு காவிரி பிரச்னைல இறங்கீட்டீங்களே..
சீமான்: ஏன்ன சார் செய்றது, வயிறுன்னு ஒன்னு இருக்கே… இப்பெல்லாம் ஈழதிற்கு காலம் இல்லை, பிரபாகரன் என்றால் என்றால் யாரும் கண்டுகொள்வதில்லை. நாம் தம்பிகள் எல்லாம் சோர்ந்து இருந்த நேரத்தில் நல்ல வேளையில் தம்பிகளுக்கு வேலை கொடுக்க இந்த காவிரி பிரச்னை வந்தது.
நிருபர்: சிலர் நீங்கள் தீக்குளிக்க சொன்னதாக சொல்கிறார்களே…
சீமான்: நான் டீ குடிங்க, டீ குடிங்கன்னுதான் கத்துனேன். அத நம்ம தம்பிங்க தீ குளிங்க தீ குளிங்கன்னு புரிஞ்சு கிட்டா நான் என்ன செய்றது நீங்களே சொல்லுங்க. சாதாரணமாவே குளிக்காத பய தீக்குளிச்சது ஆச்சர்யம்தான்.
நிருபர்: உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன…
சீமான்: வேற ஏன்ன…அந்த பயலுக்கு மாலை, ஊதுபத்தி, சந்தானம்தான் ..ஹ்ம்ம் கொடுத்து வச்சவன்
நிருபர்: வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
சீமான்: உங்கள மாதிரி மீடியாக்கு நல்ல ஜாலிதான், எனக்கும் இனி கொஞ்சம் விளம்பரம் கிடைக்கும். யாரு பெத்த புள்ளயோ விக்னேஷ் வாழ்க, அவ்வளவுதான்.
There are no comments yet
Or use one of these social networks