முழு அடைப்பின் போது மக்கள் துயர் துடைக்க சன் டிவி, கலைஞர் டிவி-களில் சிறப்பு மானாட மயிலாட நிகழ்ச்சிகள் – கருணாநிதி அறிக்கை

454

சென்னை: காவிரி பிரச்னையின் போது கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வணிகர்கள், லாரி, ஓட்டல் உரிமையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், தமிழகத்தில் இன்று தேதி முழு கடையடைப்புப் போராட்டம் நடத்திட பல்வேறு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.இந்த முழு கடை அடைப்புப் போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு தரும். ஆனால் சன் டிவி, கலைஞர் டிவி வழக்கம் போல் இயங்கும். பொது மக்களின் துயர் துடைக்க இன்று பந்த் சிறப்பு நிகழ்ச்சிகளாக ஸ்பெஷல் மானாட மயிலாட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

There are no comments yet