சென்னை: காவிரி உரிமைக்காக புதுப்பேட்டையில் நாம் தமிழர் நடத்திய பேரணியில் தீக்குளித்த நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 90% உடல் தீயில் கருகிய நிலையில் மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே விக்னேஷின் உடல் அஞ்சலிக்காக சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை வைத்தனர். இதனால் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் போலீசார் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு கட்சி அலுவலகத்தில் வைத்து விக்னேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்த காவல்துறை அனுமதி அளித்தது.seeman-vigensh

இதை தொடார்ந்து நமது டுபாக்கூர் நிருபரிடம் பேசிய சீமான் கூறியதாவது: நாங்களும் எவ்வளவு நாளைக்கு தான் பிரபாகரனையும், முத்துகுமாரையும் வைத்து வியாபாரம் செய்வது? மக்கள் நம்மை மறந்துவிடக் கூடாதில்லையா? தொழில்னா ஒரு “அப்டேட்” வேணுமில்ல… அதான் இப்ப விக்னேஷை வைத்து வியாபாரம் சூடு பிடித்து நடக்கிறது. நாம் தமிழர் கட்சியில் சேர்வதும், எனது பேச்சுக்களை கேட்பதும் என்பதே தற்கொலைக்கு சமமானது. இதற்கும் மேலே அவர்களுக்கு தண்டனை தேவையில்லை. எனவே இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது என்று சோகம் கலந்த முகத்துடன். கூறினார்.

மேலும் நான் எனது தம்பிகளை மூளை சலவை செய்கிறேன் என்கிறார்கள், மூளை இருந்தால் அவர்கள் எங்காவது ஒரு மூலையில் ஒதுங்கி இருக்க மாட்டார்களா, என்னுடன் ஏன் வருகிறார்கள் கர்நாடகாவில் தமிழனை அடிக்கிற காட்சிகளை தமிழக முதல்வர் ஜெயாடிவியில் பார்க்கிறார். இதைப் பார்த்து அவர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? இதை எதிர்த்து, பிரதமர் மோடிக்கு தினம் எழுதுவது போல், என கர்நாடக அரசுக்கு எதிராக ஒரு போஸ்ட்கார்டாவது அனுப்பி இருக்க வேண்டும். அம்மா அப்படிச் செய்தாரா?, குறைந்த பட்சம் ‘என்னுடைய உயிர்மேல் தமிழக அரசுக்கு அக்கறை உள்ளது’ என்று போலியாக என் தம்பிகளை நம்ப வைத்seeman-ungalnewsதிருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் இதெல்லாம் ஒரு பிரச்னையா என 91,308 பேர் கட்சியில் சேரும் விழாவில், வாழை மரம், தோரணம் எனக் கொண்டாட்டம் சகிதம் அவர் தன் வேலைய பார்த்துக் கொண்டு இருக்கிறார். காவிரி பிரச்னை என்பது என் உடம்பில் ஓடும் ரத்தம் கிடையாது, அது யூடியூப்பில் ஓடும் ஒரு வைரல் வீடியோ போலத்தான், கொஞ்ச நாள் பரபரப்பா இருக்கும் அப்புறம் எல்லோரும் அத மறந்துடுவோம். எங்க பிசினஸ் முடையில்லாமல் போய்க்கொண்டிருக்க அவ்வப்பொழுது இது மாதி பரபரப்பு செய்து கொண்டிருக்க வேண்டும் இவ்வாறு ஒரிஜினல் டம்ளர் சீமான் கூறினார்.

There are no comments yet