சென்னை: கன்னட்ர் அட்டூழியம் நீடித்தால் ரசிகர் படையுடன் பெங்களூர் சென்று தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது. சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த, நடந்துகொண்டு இருக்கிற நிகழ்ச்சிகளை கண்டு நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இதை தீவிரமாக நான் கண்டிக்கிறேன். கர்நாடக மக்கள் ஈவு இரக்கமின்றி ராட்சதர்களாக ஆவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது எப்படி இருக்கிறது என்றால் பெரியவர்கள் செய்கிற தவறுகளுக்கு அவர்களுடைய ஒன்றும் அறியாத குழந்தைகளை ரோட்டிற்கு கொண்டு வந்து சாட்டையால் அடிப்பது போல உள்ளது.

காவிரி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் முடிவை எதிர்த்து இம்மாதிரி வன்முறைகளில் ஈடுபடுவது கண்டும் நம் நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை கண்டும் மிகவும் சங்கடப்படுகிறேன். இதற்கு மூல காரணம் சில அரசியல்வாதிகளும், சில மொழி வெறிபிடித்தவர்களும் மற்றும் சில பத்திரிகைகளும். இவர்கள் ஜனங்களை ஊக்குவித்து இம்மாதிரி வன்முறைகள் நடப்பதற்கு காரணமாக உள்ளார்கள். முதலில் ஊக்குவிப்பவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள், செயல்படும் விதங்கள் இவற்றை நான் மனமாற பாராட்டுகிறேன். நான் ஆரம்பகாலத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன் மதவெறி, சாதிவெறி, மொழிவெறி இவைகள் சமுதாயத்தின் அழிவுக்கு காரணமாகும். நான் தமிழன், கன்னடக்காரன், மலையாளி, குஜராத்தி, தெலுங்கன் என்று வேறுபாடுகள் இருக்கவே கூடாது. நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற எண்ணம் நமக்கு உண்டாக வேண்டும். இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு துரிதமாக ஓர் முடிவை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இங்கும் ஒரு அசாம், ஒரு பஞ்சாப், ஒரு காஷ்மீர் போன்ற சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.rajini-2

கர்நாடகத்தில் வன்முறையினரால் பாதிக்கப்பட்டு கோவை, நீலகிரி, வட ஆற்காடு அம்பேத்கர், தர்மபுரி மாவட்டங்களில் தங்கி இருக்கும் தமிழர்களுக்கு, வேட்டி சேலை போன்ற உதவிகளை நான் நேரிடையாகவே செய்யப் போகிறேன். நாளையில் இருந்து அப்பணி ஆரம்பமாகும். பாதிக்கப்பட்ட தமிழர்கள் என்னைத் தேடி வந்தால் அவர்களுக்கு உதவி செய்ய என்னுடைய இல்லம் எப்போதும் திறந்து இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கும் ஓர் வேண்டுகோள். தயவு செய்து வன்முறையில் ஈடுபட வேண்டாம்.அப்படி ஈடுபட்டால் அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

இச்சூழ்நிலை இப்படியே தொடருமானால், இந்த தளபதி ரஜினிகாந்த் முன்னிலையில் ஒரு படை தமிழ்நாட்டிலிருந்து புறப்படும். கர்நாடகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழன் வீட்டிற்கு முன்னாலும் என்னுடைய படை வீரர்கள், நூறு நூறு பேர் பாதுகாப்பாக நிற்பார்கள். அதற்கு என் ரசிகர்கள் என்றென்றும் தயாராக இருக்க கேட்டுக்கொள்ளுகிறேன்

இன்னாபா தலீவரு மௌன விரததை கலைச்சிட்டாரான்னு கேட்காதீங்க இந்த அறிக்கை சுமார் 24 வருடங்களுக்கு முன்பு 30.12.1992 தேதியில் ரஜினி கொடுத்த அறிக்கை.

இந்த நியூஸ் பேப்பர் கட்டிங் அறிக்கையுடன் ரஜினி வீட்டை முற்றுகையிட்ட நமது கப்சா நிருபரிடம் அந்த துண்டு பேப்பரை வாங்கிப் படித்துவிட்டு விட்டத்தை பார்த்தபடி ஹ ஹ ஹ என சிரித்த ரஜினி கொடுத்த தற்போதைய பேட்டி:

“இந்த செய்தியை படிக்க எனக்கே சிரிப்பாக வருது. அந்த அளவு தமிழ் ரசிகனின் பொழைப்பு சிரிப்பா சிரிச்சி கெடக்குது. அப்போது சிறிய டைரக்டர்களுடன் பணி புரிந்து கொண்டு இருந்த நேரம், மணி ரத்னம் என்ற மாபெரும் கலைஞனுடன் இணையும் வாய்ப்பு கிடைச்சது. மக்களை முட்டாளாக்க கொடுத்த 24 வருடங்களுக்கு முன்பு கொடுத்த அறிக்கை தான் இது. அது ஆரம்ப காலம், இப்போது மிதமிஞ்சிய அளவு பணம் புகழ் சம்பாதிச்சாச்சு. அப்போதே ரசிகர் மன்றங்களை கலைத்தாகி விட்டது. என்னால் படை திரட்டிக்கொண்டு எல்லாம் பெங்களூரு rajini roboபோக முடியாது முழங்கால் வலி உபாதை உள்ளது, வயதாகி விட்டது, கபாலி ரிலீஸ் அன்று தாணு செய்த சதியால் முதல் நாள் டிக்கெட் கிடைக்காம என் மிச்ச மீதி ரசிக பட்டாளம் பேனர்களை கிழித்து கொண்டு என் மீது கோபம் கொண்டு கோபித்துக் கொண்டு போய் விட்டார்கள். அப்புறம் எங்கிருந்து படை திரட்டுவது. வேண்டுமானால், கோச்சடையான் படத்தில் எனக்கு பதிலாக நடித்த 3டி மாடலை தளபதியாகவும், படை வீரர்களாக, ஷங்கரின் எந்திரன் படத்தில் நடிட்த்த பொம்மை ரோபோக்களையும், தயாரிப்பாளரிடம் கேட்டு சல்லிசான விலைக்கு வாங்கி தருகிறேன். அதை வைத்து கன்னட வெறியர்களுக்கு பூச்சாண்டி காட்டி பாருங்கள்” என்று தனது செல்போனில் மகள் ஐஸ்வர்யாவின் நம்பரை தேடியபடி காலில் போட்டிருந்த ரப்பர் செருப்புடன் வீட்டுக்குள் ஓடி பதுங்கிக் கொண்டார்.

There are no comments yet