சென்னை: நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, ‘கோச்சடையான்’ படத்தின் மூலமாக, ஒரு இயக்குநராக தன்னை முன்னிறுத்தியவர். அப்படத்தைத் தொடர்ந்து ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராக பொறுப்பேற்றார். தற்போது அவர் அகில இந்திய பிராணிகள் நல வாரிய பிராந்திய துணைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த “மகிழ்ச்சி” செய்தி நீடிப்பதற்குள் தான் விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான செய்தி உண்மைதான் என செளந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு தொழிலதிபரான அஸ்வின் ராம்குமாரை செளந்தர்யா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. சௌந்தர்யா விவாகரத்து செய்ய காரணம் அவர்களது குடும்பத்தை சேர்ந்த பிரபல இசை அமைப்பாளர் என்று கோலிவுட்டில் ‘கிசு கிசு’ உலா வரத்தொடங்கியுள்ளது.soundarya-rajinikanth

இந்த தொ(இ)டர் நிகழ்வுகள் குறித்து கலைப்போலி ரஜினி நமது கப்சா நிருபரிடம் கூறியது: வயதான காலத்தில் ஒரு மனிதனுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும். எனது மகள் சௌந்தர்யா கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தில் “பொய்க்கால்” குதிரைகளை அனிமேஷன் செய்து காட்டி “பார்த்தீர்களா என் ரத கஜ துரத பதாதிகளை” என்று வசனம் வைத்துள்ளார். இதைப் பார்த்த பிராணிகள் நல வாரியம் அவருக்கு இந்த பதவியை வழங்கியது. ஏற்கனவே “கோச்சடையான்” படத்தில் நான் நடித்த போது ‘என் இயக்கத்தில் நடிக்க வேண்டும்’ என்று மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் பெரிய பிரச்சனையை கிளப்பினார். ஆனால் நான் பிடிகொடுக்கவில்லை. இதில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆனாலும் இரண்டு மகள்களுக்கும் இடையே பனிப்போர் நடந்தது.soundarya

சின்ன வயதில் இருந்தே என் மகள் சௌந்தர்யாவுக்கு பிராணிகள் என்றால் உயிர். டிவி யில் சதா அனிமல் பிளானட், சேனல் தான் பார்ப்பாள். அழகாக இருப்பதால் நடிக்க போய் விடுவாள் என்று அவசர அவசரமாக கல்யாணம் பண்ணி வைத்தோம். அவள் நடிக்க டிரை பண்ணாமல் இயக்குனர் அவதாரம் எடுத்து ஆறுதல் கொடுத்தார். பிராணிகளுடன் பழகுவதாலும், என்மகள் ஒரு ‘பார்ட்டி அனிமல்’ என்பதாலும் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக தாலி கட்டிய கணவரை விரட்டிவிட்டு நாயை துணைக்கு வைத்துக் கொண்டு   இருப்பதாலும் அவருக்கு அகில இந்திய பிராணிகள் நல வாரிய உறுப்பினராக பிரதமர் மோடி பதவி வழங்கி உள்ளார். இப்போது சௌந்தர்யா “எங்களது குடும்பத்தின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளித்து, வதந்திகளை மற்றவர்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என “குருவி” படம் போட்ட ட்விட்டரில் ட்வீட் செய்திருக்கிறாள். எக்கேடோ கெட்டுப் போ என்று தண்ணி தெளித்து விட்டேன்.rajini-star

இரண்டு மகள்களும் குடுமி பிடி சண்டையில் இருப்பதால் இப்போது தனுஷ்க்கு கால்ஷீட் கொடுத்துள்ளேன். கலைப்போலி இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நான் நடிக்கும் “காவிரி பிசினஸ்” படம் விரைவில் துவங்க உள்ளது. இப்போது இளைய மகள் சவுந்தர்யாவும் கணவரை பிரிந்து வெட்டியாக வீட்டில் இருப்பதால் “எனக்கும் படம் பண்ணு” என்று போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டை கடுமையாக எதிர்க்கும் விலங்குகள் நல வாரியத்துக்கு வேண்டுமென்றே செளந்தர்யா நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது தமிழர் வீர விளையாட்டுப் பேரவையின் குற்றச்சாட்டு. ஆகையால் செளந்தர்யா உடனே அப்பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் புதிய பிரச்சினை கிளம்பி இருக்கிறது. நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். வயதாகிவிட்டது உடல் நிலையும் சரி இல்லை நிம்மதியும் இல்லை. “ஐ ஆம் பாவம்…” என்று பேட்டியை முடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

There are no comments yet