சென்னை: கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தை உலுக்கியது. இதனையடுத்து விசாரணை தகவல்களின் அடிப்படையில் ராம்குமாரை நெல்லை மாவட்டத்தில் போலீஸார் கைது செய்தனர். அதன் பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு, சுவாதி கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே சுவாதி கொலை வழக்கில் ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறையினர் முடிவு செய்திருந்தனர். கொலை தொடர்பாக நண்பர் முகமது பிலால் உள்பட 6 சாட்சியங்களின் வாக்குமூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம், ரத்த மாதிரி உள்பட 28 தடயங்களை சமர்ப்பிக்க காவல்துறை முடிவு செய்திருந்தனர். சிசிடிவி காட்சியில் பதிவான உருவத்துடன் ராம்குமார் முகபாவனை ஒப்பீடு நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் புழல் சிறையில் மின்கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். புழல் சிறையில் விசாரணை சிறை எண் 2ல் அடைக்கப்பட்டு இருந்தார் ராம்குமார். சிறையில் மின்சாரம் பாய்ந்த கம்பியைக் கடித்து தற்கொலைக்கு முயன்றதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
சிறைத்துறை கமிஷனர் என்கவுண்டர் ஏழுமலை நமது கப்ஸா நிருபரிடம் கூறும்போது, ராம்குமார் நேற்று வெள்ளை உடையணிந்த ஒரு பெண்ணின் உருவத்தை பார்த்துள்ளார், அதையடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு சிறை அதிகாரிகள் முதலுதவி சிகிச்சை அளித்து மோட்சம் கொடுத்துள்ளனர். , மேலும் “இந்த தீவிர முடிவுக்கு அவர் செல்ல வேண்டியக் காரணமான அந்த வெள்ளை ஆடை அணிந்த பெண் ஸ்வாதியின் ஆவியாக இருக்க வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் ஸ்வாதியின் ஆவி நுங்கம்பாக்கம் அருகில் சுற்றி திரிவதாக சிலர் கூறி வருகின்றனர். அதே போல் நடிகர் அருண்விஜயையும் சுவாதியின் ஆவிதான் ஆட்டுவித்து போலீசார் வாகனம் மீது இடிக்க வைத்தது என்பதை அனைவரும் அறிவர். எனவே ஸ்வாதியில் ஆவிதான் ராம்குமாரை இந்த நிலைமைக்கு ஆளாக்கி உள்ளது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இதை போலீசின் ‘துப்புரவு’ பிரிவு நாளை உறுதி செய்யும் என திகில் முகத்துடன் கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks