சென்னை: சுவாதி கொலை வழக்கின் பின்னணி குறித்தும், சிறையில் ராம்குமார் மரணம் அடைந்தது ஒரு வெளி நாட்டு சாதி என்றும், இதற்கு ஐநா விசாரணை நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி காலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இளம் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று சிறைத்துறையினர் கூறுவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நாட்டையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என்று கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் தக்க பாதுகாப்புடன்தான் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். ராம்குமார் சிறையின் உள்ளே கட்டுக்காவல்களை மீறி, சமையல் அறையில் மீன் குழம்பு வைக்கும்போது மின் கம்பியை கடித்து இறந்தார் என்பது தெரிந்து மிக்க வருத்தமுற்றேன்.ramkumar1

இப்படித்தான் ஒரு முறை நான் தேசிய தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது நாங்கள் இருவரும் உணவு உண்ணும்போது அவரது தொண்டையில் மீன் முள் குத்தி வலி ஏற்படுத்தியது. அந்த வலியால் அவருக்காக நான் துடித்தேன். அன்று எனக்கு ஏற்பட்ட அந்த வலி இன்று வரை ஆறாமல் வடுவாய் என் மனதை வாட்டுகிறது. அதைப் போலவே மின் கம்பி கடித்த என் தம்பி ராம்குமாரின் வலியும் இருக்குமென்றால் அது மிகையாகாது.

சிறைக் கைதி ஒருவர் சமையல் அறையில் மின்சாரத்தை திருடி இருக்கிறார், இந்த திருட்டை காவலர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்களா? சிறையில் நடந்த இந்தச் செயலுக்கு சிறைத்துறை அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். தனது மின்சார திருட்டை அதிகாரிகள் பார்த்து விட்டார்களே என அங்கேயே தற்கொகொலை செய்து கொண்ட ராம்குமார் ஒரு மானமுள்ள தமிழன், அந்த அஞ்சா நெஞ்சனை மாவீரன் ராம்குமாரை இனி வரலாறு மறக்காது.

எனவே சிறையில் மின்சாரத்தை திருடி, தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் மரணம் ஒரு வெளிநாட்டு சதியாக இருக்கக் கூடும் என நான் சந்தேகிக்கிறேன். இது குறித்து ஐநா விசாரணை கோரி எனது தலைமையில் ம.தி.மு.க சார்பில் அமெரிக்க தூதரகம் முன் போராட்டம் நடத்த ஆயத்தமாவோம்” என்று வைகோ கூறியுள்ளார்.

There are no comments yet