சென்னை: ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், புழல் சிறைக்குள்ளேயே மர்ம மரணம் அடைந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுவாதி கொலை வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் அதை காரணம் காட்டி ராம்குமார் ஜாமீனில் வெளிவந்திருக்க வாய்ப்பு இருந்தது. அவ்வாறு ராம்குமார் வெளியில் வந்திருந்தால் சுவாதி கொலையில் உள்ள மர்மங்களும் வெளியில் வந்திருக்கும். ஆனால் அதற்குள் ராம்குமார் உயிர் இழந்து விட்டதால் அவருடன் சேர்ந்து இந்த கொலை வழக்கில் உள்ள மர்மங்களும் புதைந்து விட்டது. ராம்குமார், மின்சாரத்தைப் பயன்படுத்தி தற்கொலை செய்திருக்கும் தகவல் நம்பும்படியாக இல்லை. ஒரு சுவிட்ச் பாக்ஸை உடைக்க குறைந்தது இரண்டு நிமிடங்களாகும். அந்த நிமிடங்களுக்குப் பிறகு மின்கம்பியை வாயால் கடிக்க வேண்டும். இந்த இடைப்பட்ட நேரத்தில் ராம்குமாரை கண்காணிக்கத் தவறியுள்ளது சிறை நிர்வாகம். டிஸ்பென்சரி பிளாக்கில் உள்ள சுவிட்ச் பாக்ஸ்கள் அனைத்தையும் யாரும் எளிதில் தொட முடியாது. லைட்டை ஆன் செய்ய வேண்டும் என்றால் கூட லத்தியைதான் சிறைகாவலர்கள் பயன்படுத்துவார்களாம். அப்படியிருக்கும் போது எப்படி வாயால் ராம்குமார், மின்வயரை கடித்தார் என்று சிறை சொல்வது நம்பும்படியாக இல்லை. தமிழக நல்லாட்சியில் பெண்ணொருத்தி தனியா வேலைக்குப்போக முடியல. கைதி நீதிவிசாரணைக்கு முன் நிற்கமுடியல. காவல்துறையும் சிறைத்துறையும் சேர்த்து ஒருத்தனை கைதிகிறாங்க. மின்சாரகம்பிய கடிச்சிபுட்டங்கிறாங்க, தெருவுல நடந்தாகும் சாவுதான். சிறைக்குள்ள இருந்தாலும் சாவுதான் என்று நிலை உருவாகி உள்ளது. இந்த வழக்கு திசை திரும்பி உண்மை குற்றவாளிகளான சுவாதியின் அப்பா, சித்த்தப்பாவை நோக்கி திரும்புவதை தவிர்க்க, ஒரு அப்பாவி உயிர் பலி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சுவாதி பெற்றோர் நமது கப்சா நிருபரிடம் அளித்த பேட்டி: எங்கள் மகளை கொலை செய்ததாக கூறப்பட்ட ராம்குமார் போலீசிடம் சிக்கிய பிறகு சிறையில் “இட்லி சாப்பிட்டார், பூரி விழுங்கினார்” என்று ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்ட போது சொல்லொணா துயரில் இருந்தோம். ஆனால் ராம்குமாருக்கு ஜாமீன் கிடைப்பதற்கு ஒரு நாள் முன்னதாக “தற்”கொலை செய்தி கொண்டதாக வந்த செய்தி ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அளிக்கிறது. சில வழக்குகள் இப்படித்தான் கையாளவேண்டும் என்பதுதான் உலக நியதி. அதனைத்தான் தமிழக போலீஸ் செய்துள்ளார்கள். இனி சாதியை தூக்கிக்கொண்டு அரசியல் செய்ய சிலர் கிளம்பிவிடுவார்கள். கோர்ட்டில் எப்படி வேண்டுமானாலும் தப்பிக்க முயற்சிக்க கூடும். இது போலீசாரின் திறமையின்மை என்று சொல்வோர் சிறுபிள்ளைகள்தான். என்கவுன்ட்டர் என்று எதிர்பார்த்த நிலையை சற்றே மாற்றி தன்கவுன்ட்டர் செய்யவைத்துவிட்டார்கள். எப்படியோ இது ஒரு புதுமாதிரிதான் என்பதில் ஐயமே கிடையாது. இனி குற்றம் செய்ய எண்ணுபவர்களுக்கு எச்சரிக்கை. அரசியல்வாதிகள் எப்படி தங்கள் பினாமிகளை எப்படி தற்கொலை செய்ய வைக்கின்றார்களோ. அதனை போன்றுதான் இந்த குற்றவாளிக்கு கையாண்டுவிட்டார்கள்.
தமிழகம் என்றாலே மின்வெட்டுக்கு பெயர் போன மாநிலம் என்பது அனைவரும் அறிந்ததே. முன்பு 7 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை மின்வெட்டு அமுலில் இருந்தது, சென்ற ஆண்டு மழை வெள்ளதின் போது கூட வாரக் கணக்கில் கரெண்ட் இல்லாமல் கஷ்டப்பட்டோம். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தமிழக அரசின் மின் கொள்கை பற்றி விமர்சித்து வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிறையில் “தற்”கொலை முயற்சியில் ராம்குமார் மின் ஒயரைக் கடித்த போது மின்சாரம் நிறுத்தப்படாமல் வழங்கி தமிழகம் மின்மிகை மாநிலமென்று நிரூபித்து ராம்குமார் உடலில் “தடையில்லாத” மின்சாரம் பாய்ச்சி வழக்கை மூடுவிழா செய்த தமிழக அரசுக்கு கோடானு கோடி நன்றி” என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
There are no comments yet
Or use one of these social networks