சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க – த.மா.கா கூட்டணி உருவாக உள்ளது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் -ஜி. கே வாசன் இருவரும் இன்று திடீரென்று சந்தித்து பேசினார்கள். .மு.க., கூட்டணியில், த.மா.கா., சேருமானால், அதில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்ற புது குழப்பம், தமிழக காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று சத்யமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தினார் கள். மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் குமரிஆனந்தன், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், கிருஷ் ணசாமி, செல்வ பெருந்தகை, கராத்தே தியாகராஜன், சிரஞ்சீவி, ஆரூண் உள்பட பலர் கலந்து கொண்டனர். உள்ளாட்சி தேர்தலில், 30 சதவீத பதவிகளை ஒதுக்க, காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், காங்கிரசுக்கு, 10 சதவீதம்; த.மா.கா., வுக்கு, 5 சதவீதம் ஒதுக்க, தி.மு.க., ஆலோசித்து வருகிறது. குறைந்தபட்சம், 15 சதவீத பதவிகள் அளித்தால் தான், தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள், திருநாவுக்கரசரிடம் வலியுறுத்தியுள்ளனர்.thirunavukarasarwith-congress-factions

பின்னர் திருநாவுக்கரசர் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விவாதித்தோம். தேர்தலில் பேட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக் கள் வாங்குவது, அதற்கு குழுக்கள் அமைப்பது பற்றி பேசி இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீட்டை, மாநில அளவில் பிரிப்பதா, மாவட்ட அளவில் பிரிப்பதா என்பது குறித்து, பேசி முடிவு செய்வோம். நாங்கள் விரும்பும் இடங்களை தி.மு.க. தராவிட்டால், அல்லது வசமில்லாத வாசனுடன் கூட்டணிக்கு முயன்றாலோ எங்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் எங்களிடம்தான் அளவிலாத கோஷ்டிகள் இருக்கின்றன. எங்கள் கோஷ்டிகளுக்குள்ளேயே கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். ஆனால் இப்போதைக்கு திமு.க காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. கூட்டணி தொடர்பான யூகங்களுக்கு பதில் கூற முடியாது.என கூறினார்.

There are no comments yet