சென்னை: சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சுவாதி கொலை வழக்கு விசாரணை கைதி ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நடைபெறாமல் மரணம் குறித்த மர்மம் நீடித்து வருகிறது. இந்நிலையில் ராம்குமார் மரணம் குறித்து காவல்துறை தரப்பில் முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆரில், மாலை 4.30 மணிக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என ராம்குமார் கேட்டதால் வார்டன் பேச்சிமுத்து சிறைக்கதவை திறந்துவிட்டுள்ளார். வெளியேவந்த ராம்குமார், திடீரென்று அருகில் இருந்த சுவிட்ச் பாக்ஸை பலமாக உடைத்து, அதில் இருந்த மின் கம்பியை இழுத்து தனது பற்களால் கடித்தார். அதைப்பார்த்த வார்டன் பேச்சிமுத்து, ஓடிவந்து லத்தியால் அடித்து அவரைக் காப்பாற்ற மின்சார இணைப்பை உடனடியாக துண்டித்து, சிறைக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர், பணியிலிருந்த சிறை மருத்துவர் ராம்குமாருக்கு முதலுதவி கொடுத்துள்ளார். ராம்குமாரின் நிலை மிக மோசமாக இருந்ததால் அங்கிருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. ராயப்பேட்டையில், ராம்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். என அந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே முதல் தகவல் அறிக்கையின் ஸ்டேப்ளர் பின் சரியாக அடிக்காததால் காணாமல் போனதாக கூறப்பட்ட சில இணப்பு பக்கங்கள் நமது கப்ஸா நிருபரிடம் கிடைத்துள்ளது. அதில் விடுபட்ட தகவல்கள் பின் வருமாறு: ராம்குமார் வாயில் காயம் எதுவும் ஏற்படவில்லை, வலது கண் வலது கழுத்து, வலது தோள்பட்டையில் காயம் பட்டது மருத்துவர் அளித்த முதல் அறிக்கையில் வெட்டவெளிச்சமாகி விட்டது, அதனாலேயே இந்த பேச்சிமுத்து லத்தியால் அடித்த விடுபட்ட தகவல் சேர்க்கப்பட்டுள்ளது. ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்த பிளாக்கில் உள்ள மின்சார சுவிட்ச் பாக்ஸ் கடந்த சில தினங்களாக பழுதடைந்து காணப்பட்டுள்ளது. அதை சரி செய்ய சிறையில் உள்ள எலக்ட்ரீஷியனிடம் சொல்லியும் அவர் செய்யவில்லை என்று தெரிகிறது. மேலும் அந்த பிளாக்கில் உள்ள கண்காணிப்பு கேமராவும் பழுதடைந்துள்ளது. இதனால் ராம்குமார், தற்கொலை நிகழ்வு அதில் பதிவாகவில்லை.
பேச்சிமுத்துவுக்கு கொஞ்சம் ஞாபக மறதி, அதேபோல் எந்த மின் ஒயரை கடித்தான் என்பதிலும் பலத்த சந்தேகம் கிளம்பியது,புழல் சிறையில் உள்ள சுவிட்ச் பாக்ஸ் அனைத்தும் கைக்கு எட்டாத உயரத்தில் (சுமார் 10 அடி உயரம்) வைக்கப்பட்டுள்ளன. சுவிட்ச் பாக்ஸ் பழுதடைந்து இருந்ததால் அதை எளிதில் ராம்குமார் உடைத்துள்ளான். அதனால் அவசர அவசரமாக நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் இருந்த சிறைத்துறை எலெக்டிரீஷியனை கூப்பிட்டு நல்லா இருந்த எலெக்டிரிக் பாக்சை திறந்து போட்டு ஒயர்களையும் பிடுங்கின் தொங்க விட்டு போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளோம். பணியில் இருந்த சிறை மருத்துவர் கூட முதுலுதவி சரியாக செய்யாதது எதற்காக என்றால் ராம்குமார் உயிர் பிழைத்துவிட்டால் உலக அமைதி தினமான 21 செப்டம்பர் அன்று, கூண்டுப் பறவையாக சிறையிலேயே காலத்தைக் கழிக்க வேண்டுமே என்பதற்காகத்தான். எப்படியோ உலக அமைதி தினத்தன்று ராம்குமார் ஆன்மா சுதந்திரப் பறவையாக வெள்ளைபுறாவாக வானில் உலாவிக் கொண்டிருக்கிறது அனவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது .
There are no comments yet
Or use one of these social networks